573 பேருக்கு டெங்கு; இன்று 12.52 லட்சம் பேருக்கு கொரோன தடுப்பூசி- அமைச்சர் மா.சு

 
ma subramanian

சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், “இன்றைய 11 வது மெகா தடுப்பூசி முகாமில் 12லட்சத்து  52 ஆயிரத்து 832 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இன்று நடைபெற்ற 50 ஆயிரம் முகாம் மூலம்  முதல் தவணை தடுப்பூசியை 4லட்சத்து  52 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் செலுத்தியுள்ளனர். 2 வது தவணை தடுப்பூசியை  7லட்சத்து  48 ஆயிரத்து 860 க்கும் மேற்பட்டோர் செலுத்தியுள்ளனர்.  இன்று 18 மாவட்டங்களில் கடும் மழைப்பொழிவையும் தாண்டி சிறப்பாக முகாம் நடைபெற்றது. 

TN prepared to tackle 3rd Covid wave: Health Minister | english.lokmat.com

இதுவரை தமிழகத்தில்  முதலாவது தவணை தடுப்பூசியை 77.02 விழுக்காடு நபர்கள்  செலுத்தியுள்ளனர். 2 வது தவணை தடுப்பூசியை  41.60 விழுக்காடு நபர்கள் செலுத்தியுள்ளனர். 2வது தவணை செலுத்த வேண்டியவர்களின் எண்ணிக்கை 78 லட்சத்து27ஆயிரத்து 466ஆக உயர்ந்துள்ளது. குறைவான தடுப்பூசி செலுத்திய நாடுகளில் கூடுதல் இறப்பு  ஏற்பட்டுள்ளது. சென்னை உட்பட 15 மாவட்டங்களில் 80 விழுக்காட்டுக்கும் மேலான நபர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி  உருவாகியுள்ளது. மீதம் உள்ள மாவட்டங்களில்  60 முதல் 70 சதவீதம் வரை எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளது. 

வேலூர் , ராணிப்பேட்டை , திருப்பத்தூர் ,  மயிலாடுதுறை உட்பட 7 மாவட்டங்களில் குறைவான தடுப்பூசியே செலுத்தப்பட்டுள்ளது. தன்னார்வலர்கள் , உள்ளாட்சி பிரதிநிதிகளை பயன்படுத்தி அங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். 5 முதல் 6 நாட்களில் தன்னார்வலர்களை அழைத்து கூட்டம் நடத்த உள்ளோம். 12 வது முகாமுக்கு பிறகு காலை 9மணி முதல் 5 மணி வரையாக தடுப்பூசி செலுத்தும் நேரத்தை மாற்ற உள்ளோம். மேலும் வாரத்தில் ஒரு நாள் மட்டும் தடுப்பூசி முகாம்  நடத்த உள்ளோம்.  இல்லம் தேடி தடுப்பூசி திட்டம் இந்தியாவிற்கே வழிகாட்டியாக அமைந்துள்ளது, ஒன்றிய அரசு தமிழகத்தை பார்த்து இந்த திட்டத்தை பின்பற்றுகிறது. 

பொது இடங்களுக்கு வருவோர் கட்டாயம் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற பொது சுகாதாரத்துறை அறிவிப்பாலேயே கடந்த 2 முகாம்களில் தடுப்பூசி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் டெங்கு பாதிப்பால் 573 பேர் தற்போது  சிகிச்சையில் உள்ளனர். கடந்த மாதம் 1 லட்சத்து 30 ஆயிரத்து 920 நபர்களுக்கு டெங்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு 4527 நபர்களுக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டது.குடிநீரில் குளோரின் அளவு கூடுதலாக இருந்தாலும் பாதிப்பு , குறைவாக இருந்தாலும் பாதிப்பு” எனக் கூறினார்.