வரும் ஞாயிற்றுக்கிழமை 8வது மெகா தடுப்பூசி முகாம்- அமைச்சர் மா சுப்பிரமணியன்

 
ma subramanian

சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மழை பாதிப்பு தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்தனர். 

Efforts to achieve 100 pc first-dose vax by Nov: Minister Subramanian -  DTNext.in

அப்போது பேசிய அமைச்சர் மா சுப்பிரமணியன், “மழை தேங்கியுள்ள பகுதிகளில் மழை நீரை அப்புறப்படுத்தும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மழையைத் தொடர்ந்து மக்களுக்கு 166 இடங்களில் மருத்துவ முகாம்கள் செயல்பட்டு வருகிறது. நாளை தமிழ்நாடு முழுவதிலும் 5000 இடங்களில் மாபெரும் மருத்துவ முகாம் திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 750 முகாம்கள் திட்டமிடப்பட்டுள்ளது.

வரலாற்றில் ஒரே நாளில் 5000 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட இருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை எட்டாவது மெகா தடுப்பூசி 50,000 இடங்களில் நடத்தப்பட இருக்கிறது. முதல் தவணை தடுப்பூசி 72 சதவீதமும் இரண்டாவது தவணை 33% எட்டியிருக்கிறது. இரண்டாவது தவணை செலுத்தாமல் இருக்கும் 70 லட்சம் பேரைக் கண்டறிந்து ஞாயிற்றுக்கிழமை தடுப்பு ஊசி செலுத்தப்படும். கோவை மருத்துவக் கல்லூரி 1996 இல் தொடங்கப்பட்டது. கோவை மருத்துவக் கல்லூரிக்கு கூடுதலாக 50 மாணவர்களை சேர்ப்பதற்கான வாய்ப்பு இப்போது அனுமதி கிடைத்திருக்கிறது. அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களின் எண்ணிக்கை 9,150 ஆக உயர்ந்துள்ளது.

493 டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மழைக்குப் பிறகு டெங்கு பாதிப்பு குறையும். டெங்கு பாதிப்பு குறித்து மத்திய குழு ஆய்வு செய்துள்ளது. நீட் மசோதா தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். ஆளுநர் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழ்நாடு முழுவதிலும் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் மருத்துவ முகாம்கள் இதுவரை நடத்தப்பட்டிருக்கிறது” எனக் கூறினார்.