56% பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர்- அமைச்சர் மா.சு

 

56% பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர்- அமைச்சர் மா.சு

மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பாக பட்ஜெட் கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட மூன்று திட்டங்களை இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியம்
தொடங்கி வைத்தார்,

56% பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர்- அமைச்சர் மா.சு

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “சற்று குறைப்போம் என்ற திட்டத்தின் மூலம் எண்ணெய், சர்க்கரை, உப்பு கூடுதலாக உட்கொள்வதால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொதுமக்கள் உடல் சுகாதாரம் பேணிப் பாதுகாக்கப்படும், உபரி உணவை வீணாக்காமல் பகிர்வோம் என்ற இத்திட்டத்தின் மூலம் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் திருமண மண்டபங்கள் சுபநிகழ்ச்சிகள் பெரிய மாநாடுகள் மூலம் கைபடாமல் உள்ள உபரி உணவுகள் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அல்லது அரசு மூலம் பசித்தவர்களுக்கு உதவும் வகையில் அளிக்கப்படும்.

உபயோகித்த எண்ணெய் மறுபயன்பாடு திட்டம் மூலம் பெரிய உணவகங்கள், சிறிய உணவகங்களில் பயன்படுத்தப்பட்ட எண்ணெயை லிட்டருக்கு 30 ரூபாய் என்று அரசு விலைக்கு வாங்கி அந்த எண்ணெய்யை பயோடீசல் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு விற்பனைக்கு கொடுக்கப்படும்.

குடிசை பகுதிகளில் வாழும் பொதுமக்கள், பெரிய ஓட்டல்களில் வீணாக்கப்படும் உபயோகப்படுத்தப்பட்ட எண்ணெய்களை குறைந்த விலைக்கு வாங்கி அவர்கள் உட்கொள்வதால் உடல் உபாதைகள் ஏற்பட்டு நோய் ஏற்படுவதாகவும் அதை தடுக்கும் விதமாகதான் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை 56 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.நேற்றைய தினம் வரை 4 கோடியே 31 லட்சம் 9 ஆயிரத்து 804 பேருக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டதால் தமிழக முழுவதும் தடுப்பூசி முகாம்களுக்கு விடுமுறை விடப்பட்டது. தடுப்பூசிகள் வந்தவுடன் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் செயல்படும், தமிழகம் முழுவதும் மருத்துவ துறையில் ஒப்பந்த தொழிலாளராக பணியாற்றுபவர்களை கணக்கிட்டு அவர்கள் தகுதியின் அடிப்படையில் நியமனம் செய்யப்படுவர்” எனக் கூறினார்.