வெள்ள பாதிப்பை ஆய்வு செய்ய மத்திய குழு நாளை தமிழகம் வருகை : அமைச்சர் தகவல்!!

 
KKSSR Ramachandran

வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய 7 உயர் அதிகாரிகள் கொண்ட ஒன்றியக் குழு நாளை தமிழ்நாடு வருகிறது என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

stalin
இந்நிலையில் தமிழகத்தின் வட மாவட்டங்களில் ஏற்பட்ட மழை வெள்ளப் பாதிப்பு குறித்து இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் விளக்கமளித்தார். இதுகுறித்து பேசிய அவர், "மழை, வெள்ள பாதிப்பு ஆய்வு செய்ய மத்திய குழு நாளை தமிழகம் வருகிறது.  மழை சேதங்கள் குறித்து, மாவட்டங்களிலிருந்தும் கூடுதல் விவரங்கள் வந்த வண்ணம் உள்ளன.  வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய 7 உயர் அதிகாரிகள் கொண்ட ஒன்றியக் குழு நாளை தமிழ்நாடு வருகிறது. இந்தக் குழுவானது 21, 22, 23 ஆகிய தேதிகளில் ஆய்வு செய்கிறது. அத்துடன்  வெள்ள பாதிப்புகளை சீரமைக்க 2,629 கோடி வழங்க கூறியுள்ளோம்" என்றார்.

rain

தொடர்ந்து பேசிய அவர், "தமிழ்நாட்டில் தொடரும் கனமழை மற்றும் அண்டை மாநிலங்களில் ஏற்பட்டுள்ள கனமழை காரணமாக தமிழக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.சென்னை, காஞ்சி செங்கல்பட்டில் ஒரு குழு ஆய்வு செய்கிறது. குமரி ,நெல்லை மாவட்டங்களில் மற்றொரு குழு ஆய்வு செய்கிறது. நாகை ,தஞ்சை ,திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் மற்றொரு குழு ஆய்வு செய்கிறது. ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ,வேலூர் மாவட்டங்களில் தொடர்ந்து வெள்ள பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. 24ம் தேதி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் ஒன்றியக்குழு ஆலோசிக்கிறது.  வெள்ள நிவாரணப் பணிகளுக்காக முதற்கட்டமாக 549 கோடியை விடுவிக்க ஒன்று அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்" என்றார்.