கள்ளக்குறிச்சி விவகாரத்தை அரசியலாக்க நினைக்கும் ஈபிஎஸ் எண்ணம் எடுபடாது- எ.வ.வேலு

 
ev velu

கள்ளக்குறிச்சி விவகாரத்தை அரசியலாக்க நினைக்கும் எதிர்க்கட்சி தலைவரின் எண்ணம் தமிழக மக்களிடம் எடுபடாது என அமைச்சர் எ.வ. வேலு பேரவையில் தெரிவித்தார்.

DMK Minister alleges misconduct by officials as Income Tax raids spots  linked to him - India Today

காவல்துறை மானிய கோரிக்கை விவாதத்தில் பேசிய உறுப்பினர் ஜவாஹுருல்லா, கள்ளக்குறிச்சி சம்பவத்தை சிபிசிஐடி விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், மத்திய அரசின் மனித உரிமைகள் ஆணையம், மகளிர் ஆணையம் இதில் மூக்கை நுழைப்பது மாநில நலனுக்கு எதிரனது. கடந்த காலங்களில் சிபிஐ விசாரணைக்கு வழக்கை மாற்றும் போது முன்பாகவே சிபிசிஐடி வழக்கை முழுவதுவது கண்டுபிடித்திருக்கும். ஆனால் சிபிஐ விசாரணையில் வெளிவந்தது போன்ற ஒரு தோற்றம் ஏற்படும். கள்ளக்குறிச்சி சம்பவத்தில் சிபிசிஐடி விசாரணையே போதுமானது, என்றார்.

இதற்கு பதில் அளித்து பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலு, கடந்த 2015ம் ஆண்டு செப்டம்பர் 22ம் ஆண்டு திருச்செங்கோட்டில் விஷ்ணு பிரியா என்கின்ற காவல்துறை அதிகாரி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஓய்வு பெற்ற டிஜிபி திலகவதி ஒரு பேட்டியில்  சிபிஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார். ஆனால், அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா சிபிஐ  மட்டும் நேர்மையான விசாரணை நடத்துவார்கள் என்ற கருத்து சரியானது அல்ல என்றார்.

DMK Minister EV Velu: கண்டக்டர் டூ மினிஸ்டர்... யார் இந்த எ.வ.வேலு?  திமுகவின் மாஸ்டர் மைண்ட் தலைவரானது எப்படி?

தற்போது எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் எடப்பாடி  சி.பி.ஐ விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவித்து, ஜனநாயக கடமையை வெளியில் இருந்து செய்து வருகிறார். சிபிசிஐடி உண்மையான விசாரணை மேற்கொள்வார்கள்,  யாராக இருந்தாலும், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்து இருக்கிறார். இதை அரசியலாக்கலாம் என்று நினைக்கும் எதிர்க்கட்சி தலைவரின் எண்ணம், தமிழக மக்களிடம் எடுபடாது என அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்தார்