பிள்ளைகளை பகுத்தறிவோட வளர்ப்பது பெரிய விஷயம் - அன்பில் மகேஷ்
மாணவர்கள் கல்வி அறிவோடு பகுத்தறிவையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே தனியார் கல்லூரியில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள், விண்ணில் விஞ்ஞான தேடல் என்ற தலைப்பில் ஐந்து நாட்கள் நடைபெறும் முகாமில் பங்கேற்றுள்ளனர்.இந்த முகாமில் இன்று கலந்து கொண்ட தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மாணவர்களுடைய உரையாடினார். அப்போது மாணவர்கள் கல்வி அறிவு மட்டுமல்லாது பகுத்தறிவையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
தமிழ்நாடு அரசின் விண்ணில் விஞ்ஞான தேடல் என்ற திட்டத்தின் கீழ் தஞ்சை மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இருந்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் 5 நாட்கள் தங்கி இருந்து அவர்களுடைய தனித்திறனை வளர்த்துக் கொள்ளும் பயிற்சி முகாம் மேலூர் அருகே தனியார் கல்லூரியில் நேற்று முன் தினம் தொடங்கியது. இன்று மாணவர்களிடையே கலந்து கொண்டு பேசிய தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி, பிள்ளைகளை வளர்ப்பது பெரிய விஷயம் அல்ல; பகுத்தறிவோடு வளர்ப்பதே பெரிது, மாணவர்களும் கல்வி அறிவோடு பகுத்தறிவையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். பழமொழிகளை நம்மி ஏமாறாமல் அதில் உள்ள விஞ்ஞான அறிவை தெரிந்து தன்னை வளர்த்துக் கொள்ள வேண்டும். மாணவர்களின் தனித்திறமையை மேம்படுத்துவதற்காக மட்டுமே முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் தங்களை திறனை வளர்த்துக் கொண்டு வாழ்க்கையில் வெற்றி அடைய வேண்டம்” என பேசினார்.