உதயநிதி துணை முதல்வரானது ரொம்ப பெருமையா இருக்கு- அமைச்சர் அன்பில் மகேஷ்

 
அமைச்சர் அன்பில் மகேஷ்


உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவி ஏற்றிருப்பதை கண்டு நண்பனாகவும் கட்சியின் தொண்டனாகவும் பெருமை அடைகிறேன் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

விமர்சனங்கள் வரத்தான் செய்யும்.. உதயநிதி நியமனம் குறித்து அன்பில் மகேஷ்  பொய்யாமொழி | anbil mahesh poyyamozhi explain why Udhayanidhi stalin  appointed as dmk youth wing secretary ...

பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக உள்ள அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடர்ச்சியாக தமிழ்நாடு முழுவதும் மாவட்ட  வாரியாக பள்ளிகளில் ஆய்வு செய்து வருகிறார். அந்த வகையில் இன்று திருவள்ளூர் மாவட்டம் ஆவடி திருத்தணி திருவள்ளூர் ஆகிய அரசு பள்ளிகளில் ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், “சக அமைச்சராக இருந்த உதயநிதி தற்போது எங்களுக்கான கண்காணிப்பு அதிகாரியாக பதவி ஏற்று உள்ளார். உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவி ஏற்றிருப்பதை கண்டு நண்பனாகவும் கட்சியின் தொண்டனாகவும் பெருமை அடைகிறேன். துணை முதலமைச்சராக பொறுப்பேற்று முதல்முறையாக ஆய்வுக் கூட்டம் செல்வதால் அவரிடம் வாழ்த்து தெரிவித்தேன். அப்போது அவர் புதுசாக ஆய்வு கூட்டத்திற்காக செல்கிறேனா?  என கலகலப்பாக தன்னிடம் கேட்டார். துணை முதலமைச்சராக பொறுப்பேற்று மழைக்காலம் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க முதல் ஆய்வு கூட்டம் செல்வதால் வாழ்த்துக்கள் கூறினேன். 

State government will determine the Education Policy for the State" -  Minister Anbil Mahesh interview | "மாநிலத்திற்கான கல்வி கொள்கையை மாநில அரசே  நிர்ணயிக்கும்" - அமைச்சர் அன்பில் ...

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேகம் எடுக்கிறார், அவர் வேகத்திற்கு ஈடு கொடுக்கும் வகையில் நாங்களும் உழைத்து கொண்டு இருப்போம். கல்விக்கான நிதியை ஒதுக்கக்கோரி ஒன்றிய அரசிடம்  துறையின் அமைச்சராக இரண்டு முறையும் முதலமைச்சரை நேரிலும் சந்தித்து வலியுறுத்தி வந்துள்ளேன். கல்விக்கான நிதி ஒதுக்குவதில் தயவுசெய்து ஒன்றிய அரசு அரசியல் பார்க்கக் கூடாது. 45 லட்சம் மாணவர்களின் எதிர்காலம், 15 ஆயிரம் ஆசிரியர்கள் வாழ்வாதாரம், 32,298 ஊழியர்களின்  எதிர்காலம் என எல்லாத்தையும் வலியுறுத்தி உள்ளோம். ஆனால் ஒன்றிய அரசு மும்மொழி கொள்கையிலேயே பிடிவாதமாக உள்ளது. நாம் என்றுமே மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொள்ள முடியாத மாநிலமாக இருந்து வருகிறோம். அத்தகைய கொள்கை பிடிப்போடு தான் தமிழக  முதலமைச்சரும் இருந்து வருகிறார். கல்விக்கான நிதியை கேட்கும் போது ஒன்றிய அரசிடம் சரியான பதில் வரவில்லை, பதிலுக்காக காத்துக் கொண்டு இருக்கிறோம்” என்றார்.