12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து? … தீவிர ஆலோசனையில் அமைச்சர் அன்பில் மகேஷ்!

 

12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து? … தீவிர ஆலோசனையில் அமைச்சர் அன்பில் மகேஷ்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதால் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவதில் சிக்கல் நீடிக்கிறது. மாணவர்களுக்கு இது இறுதி தேர்வு என்பதால், கட்டாயமாக தேர்வு நடத்தியே ஆக வேண்டுமென்ற முடிவில் இருக்கும் பள்ளிக்கல்வித்துறை பல்வேறு கட்ட ஆலோசனை நடத்தி வருகிறது. அந்த வகையில், கடந்த 2 நாட்களுக்கு முன்னர் அதிகாரிகளுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை மேற்கொண்டார்.

12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து? … தீவிர ஆலோசனையில் அமைச்சர் அன்பில் மகேஷ்!

அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், இது மாணவர்களின் எதிர்காலம் என்பதால் மிக கவனத்துடன் முடிவு எடுக்க வேண்டியுள்ளது. மாணவர்களின் கவனத்தை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். மற்ற மாநிலங்கள் எடுத்த நடவடிக்கையை பின்பற்றுவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம். விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், 12ம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்துவது குறித்து இன்று மீண்டும் பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். கூட்டத்தின் முடிவில் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.