நடிகர் விஜய் சேதுபதியின் கோரிக்கை நிறைவேற்றப்படுமா? - அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்

 
anbil

நல்லகண்ணு அய்யாவின் வாழ்க்கை வரலாற்றை பள்ளி பாடப்புத்தகத்தில் கொண்டு வருவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆலோசனைகளை பெற்று முடிவு செய்யப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
 
சுதந்திர போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணுவின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த விழாவில் பேசிய நடிகர் விஜய் சேதுபதில், 
விடுதலைப் போராட்ட வீரர் போற்றுதலுக்குரிய நல்லகண்ணு அய்யாவின் வாழ்க்கை வரலாற்றை பள்ளி மாணவர்கள் அறிந்து கொள்ளும் நோக்கில், அவரின் வாழ்க்கை குறிப்பை பாடப்புத்தகத்தில் கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்தார். 


இந்த நிலையில், நல்லகண்ணு அய்யாவின் வாழ்க்கை வரலாற்றை பள்ளி பாடப்புத்தகத்தில் கொண்டு வருவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆலோசனைகளை பெற்று முடிவு செய்யப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,  விடுதலைப் போராட்ட வீரர் போற்றுதலுக்குரிய திரு.நல்லகண்ணு அய்யா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை பள்ளி மாணவர்கள் அறிந்து கொள்ளும் நோக்கில், அவரின் வாழ்க்கை குறிப்பை பாடப்புத்தகத்தில் இணைப்பது குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆலோசனையைப் பெற்று முடிவு செய்யப்படும் என குறிப்பிட்டுள்ளார்.