காதலி பேச மறுத்ததால் மருத்துவ கல்லூரி மாணவன் தற்கொலை

 
suicide

காதலி பேச மறுத்ததால் எம்பிபிஎஸ் மாணவன் மருத்துவக் கல்லூரி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

suicide

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்தவர் ரிஷிகேஷ். 18 வயதான இவர், சென்னை போரூரில் உள்ள ஸ்ரீ ராமசந்திர மருத்துவமனையில் பிரபல மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் முதலாம் ஆண்டு கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கி படித்து வருகிறார். இதற்காக கடந்த அக்டோபர் மாதம் 14ஆம் தேதி கல்லூரியில் இணைந்துள்ளார். இந்த நிலையில் நேற்று நீண்ட நேரமாக அவரது அறை மூடப்பட்டு இருந்துள்ளது. அதேபோல்   பெற்றோரும் செல்போனில் அழைத்த போது நீண்ட நேரமாக போனை எடுக்கவில்லை. இதனால் அதே கல்லூரியில் படிக்கும் அவரது உறவினரான விமலநாதனை விடுதிக்கு சென்று பார்க்குமாறு அவர் பெற்றோர் கூறியுள்ளனர். இதை அடுத்து இங்கே விமலனாதன் கதவைத் திறந்து உள்ளே சென்று பார்த்த போது ரிஷிகேஷ் நயிலான் கயிற்றில் தூக்கில் தொங்கியப்படி இறந்து கிடந்துள்ளார்.

இதை அடுத்து அருகே உள்ள காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. பின்னர் மருத்துவ மாணவர்களின் உடலை கைப்பற்றிய போரூர் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் மாணவன் ரிஷிகேஷ் குமாரபாளையத்தில் மூன்று ஆண்டுகளாக ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், அந்தப் பெண் கடந்த ஒரு சில தினங்களாக ரிஷிகேசன் செல்போன் அழைப்பை எடுக்க மறுத்து துண்டித்துள்ளார். அதேபோல் ரிஷிகேஷ் சென்னையில் இருப்பதால் காதலியை பார்க்க முடியாமல்  இருந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த ரிஷிகேஷ் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகின்றது.  மேலும் மாணவன் உயிர் இழப்பிற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.