‘பிரதமர் மோடி நீடித்த ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகள்’ - முதல்வர் ஸ்டாலின்..!

 
 ‘பிரதமர் மோடி  நீடித்த ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகள’ - முதல்வர் ஸ்டாலின்..!

பிரதமர் நரேந்திர மோடியின் 74வது பிறந்தநாளையொட்டி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  

தொடர்ந்து 3வது முறையாக இந்தியாவின் பிரதமராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 74வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.  முன்னதாக  4 முறை குஜராத் மாநில முதல்வராகவும் அவர் பதவி வகித்துள்ளார். தொடர்ந்து அரசியல் களத்தில் கோலோச்சி வரும் பிரதமர் மோடிக்கு , பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப்பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 

 அந்தவகையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். வரும் ஆண்டுகளில் நீண்ட ஆயுளுடனும், நீடித்த ஆரோக்கியத்துடனும் இருக்க வாழ்த்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.