கரூர் மாணவி தற்கொலை விவகாரம் : தற்கொலை செய்துக்கொண்ட ஆசிரியரின் கடிதம் சிக்கியது!!

 
karur

பாலியல் தொல்லை காரணமாக கரூரில்,  பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், பள்ளி ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

suicide

கரூரில் தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவர், கடந்த 19ம் தேதி பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்டார், அவர் எழுதி வைத்த கடிதத்தில் , பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் கடைசி பெண் நானாகத்தான் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.  இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வந்த நிலையில் மாணவி படித்த பள்ளியின் கணித ஆசிரியர் சரவணன் என்பவர் தனது மாமனார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.  

karur

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே செங்காட்டுப்பட்டி சென்ற சரவணன் அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அத்துடன் சரவணன் எழுதி வைத்த கடிதத்தில் , "என்னை மாணவர்கள் அனைவரும் தவறாக நினைக்கிறார்கள். மாணவர்களின் முன் அவமானமாக இருக்கிறது. எனக்கு வாழ ஆசை இல்லை . இன்று காலை வந்தவுடன் மாணவன் என்னை தவறாக கூறுகின்றான். நான் எந்த தவறும் செய்யவில்லை. ஏன் இப்படி கூறுகிறார்கள் என்று தெரியவில்லை. நான் மாணவர்களை கோபத்தில் திட்டி இருக்கிறேன். அனைவரும் என்னை மன்னித்துவிடுங்கள். நன்றாக படியுங்கள் மிஸ் யூ ஆல்" என்று குறிப்பிட்டு உள்ளார். தற்கொலை செய்து கொண்ட ஆசிரியர் சரவணன் உடலை கைப்பற்றிய போலீசார் அவரின் உடலை அரசு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.