“கொடநாடு CCTVஐ ஆஃப் பண்ணச் சொன்ன அந்த சார் யாரு?”- மருது அழகுராஜ் கேள்வி
கொடநாடு கொலை, கொள்ளை, மர்ம மரணங்கள்- பொள்ளாச்சி பாலியல் வன்முறைகள் - தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு மூன்றும் அதிமுக ஆட்சியில் நடந்தது.
அதில் முக்கியமானது கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம்... ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னர் அந்த பங்களாவை ஒரு கும்பல் குறி வைத்தது. கடந்த அதிமுக ஆட்சியில் தான் 2017 ஆம் ஆண்டில் ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி அன்று நள்ளிரவில் கொடநாடு தேயிலைத் தோட்டத்தில் ஒன்பதாவது எண் நுழைவாயிலில் 11 பேர் கொண்ட மர்ம கும்பல் நுழைகிறது. ஓம் பகதூர் என்கிற காவலாளியை கட்டி வைத்துவிட்டு எஸ்டேட்டுக்குள் இந்த கும்பல் நுழைகிறது. இறுதியில் அவர் கொலை செய்யப்படுகிறார். பங்களாவில் இருந்த பொருட்கள் அனைத்தும் திருடப்படுகிறது. சயான் என்கிற கேரளாவை சேர்ந்தவர்தான் இதனை செய்ததாக சொல்லப்படுகிறது. இச்சம்பவம் நடந்த ஒரு வாரத்தில் ஏப்ரல் 28ஆம் தேதி இதில் சம்பந்தப்பட்டதாக சொல்லப்படும் கனகராஜ் என்பவர் மர்மமான முறையில் மரணம் அடைகிறார். அவர் விபத்தில் மரணம் அடைந்ததாக சொல்லப்படுகிறது.
ஜெயலலிதாவுக்கு கார் டிரைவராக இருந்த இந்த கனகராஜ் சேலத்தைச் சேர்ந்தவர் சயான் என்பவர் உள்ளிட்ட கூலிப்படையை பணம் கொடுத்து அழைத்து வந்ததாக சொல்லப்படுபவர் தான் இந்த கனகராஜ் . கனகராஜ் மரணம் அடைந்த அதே நாளில் சயான் சென்ற காரும் விபத்திற்கு உள்ளாகிறது .அந்த இடத்திலேயே சயானின் மனைவியும் குழந்தையும் கொல்லப்படுகிறார்கள். காயத்துடன் தப்புகிறார் சயான். குற்ற வழக்குகளில் இது போன்று நிறைய நடக்கும். ஒருவரை வைத்து ஒரு சம்பவம் செய்ய வைப்பார்கள். அதே ஆட்களை உடனே காலி செய்து விடுவார்கள். இதுதான் கொடநாடு சம்பவத்தில் நடந்திருக்கிறது. அடுத்த சில நாட்களில் கொடநாடு பங்களாவில் சிசிடிவி ஆபரேட்டர் ஆக இருந்த தினேஷ் குமார் என்பவர் மர்மமான முறையில் உயிரிழக்கிறார். தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது .
இந்நிலையில் ஓபிஎஸ் அணியை சேர்ந்த மருது அழகுராஜ் தனது ட்விட்ட்ட்ர பக்கத்தில், “கொடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் cctv-ஐ ஆஃப் பண்ணச் சொன்ன அந்த sir யாருங்கிறதையும் கேளுங்கப்பா” எனக் குறிப்பிட்டுள்ளார். அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தில் கைதான ஞானசேகரன் செல்போனில் சார் என ஒருவரிடம் பேசியதாக கூறப்படும் நிலையில், யார் அந்த சார்? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து கேள்வி எழுப்பியுள்ளார்.