திருமண உதவித்தொகை ரூ.5000 ஆக உயர்வு - தமிழக அரசு அறிவிப்பு

 
marriage

தமிழ்நாடு நரிக்குறவர் நல வாரியம் மற்றும் சீர்மரபினர் நல வாரியங்களில் பதிவு பெற்ற உறுப்பினர் மற்றும் குடும்பத்தினருக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் திருமண உதவித்தொகையை ரூ.5,000 ஆக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Government of Tamil Nadu | LinkedIn

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “2021- 2022 ஆம் ஆண்டிற்கான மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிர்மரபினர் நலத்துறையின் மானியக் கோரிக்கையின் போது நரிக்குறவர் மற்றும் சீர்மரபினர் நல வாரியங்களில் பதிவு பெற்ற உறுப்பினர் அல்லது குடும்பித்தினருக்கு வழங்கப்படும். திருமண உதவித் தொகையை ஆண்களுக்கு 2000 ரூபாயிலிருந்து 3,000 ரூபாயாகவும் பெண்களுக்கு 2,000 ரூபாயிலிருந்து 5,000 ரூபாயாகவும் உயர்த்தப்படும்.

மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல ஆணையரின் கருத்துருவினை அரசு கவனமுடன் நன்கு பரீசிலித்து தமிழ்நாடு நரிக்குறவர் நல வாரியம் மற்றும் சீர்மரபினர் நல வாரியங்களில் பதிவு பெற்ற உறுப்பினர் அல்லது குடும்பித்தினருக்கு வழங்கப்படும் திருமண உதவித் தொகையை ஆண்களுக்கு 2000 ரூபாயிலிருந்து 3,000 ரூபாயாகவும் பெண்களுக்கு 2,000 ரூபாயிலிருந்து 5,000 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.