மெரினா கடற்கரையில் நாளை விமான சாகச நிகழ்ச்சி : சென்னையில் போக்குவரத்து மாற்றம்..!

 
மெரினா கடற்கரையில் நாளை விமான சாகச நிகழ்ச்சி : சென்னையில் போக்குவரத்து மாற்றம்..!

மெரினா கடற்கரையில் நாளை விமான சாகச நிகழ்ச்சி 2024 நடைபெறவுள்ளதை ஒட்டி போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் : “

> காமராஜர் சாலையில், காந்தி சிலை மற்றும் போர் நினைவிடம் இடையே அனுமதி சீட்டுகள் உள்ள வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.

>பாஸ் இல்லாத வாகன ஓட்டிகள் பார்க்கிங் ஏற்பாடுகளுக்கு ஆர்.கே.சாலைக்குப் பதிலாக வாலாஜா சாலையைப் பயன்படுத்திக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
 
>திருவான்மியூரில் இருந்து காமராஜர் சாலை வழியாக பாரிஸை நோக்கி செல்ல வாகனங்களுக்கு தடை. அதற்கு பதிலாக, சர்தார் படேல் ➙ சாலை காந்தி மண்டபம் வழியாக அண்ணாசாலையைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது. 

மெரினா கடற்கரையில் நாளை விமான சாகச நிகழ்ச்சி : சென்னையில் போக்குவரத்து மாற்றம்..!

> பாரிஸில் இருந்து காமராஜர் சாலை வழியாக திருவான்மியூர் செல்லும் வாகனங்களுக்கும் தடை. மாறாக, அண்ணாசாலை ➙ தேனாம்பேட்டை ➙ காந்தி மண்டபம் வழியாக திருவான்மியூர் செல்லலாம். 

> MTC பேருந்துகள் அண்ணா சிலையிலிருந்து வாலாஜா சாலை, திருவல்லிக்கேனி நெடுஞ்சாலை ரோடு, ரத்னா கஃபே சந்திப்பு, ஐஸ் ஹவுஸ் சந்திப்பு, டாக்டர் நடேசன் சாலை, ஆர்.கே.சாலை, வி.எம். தெரு, மந்தைவெளி, மயிலாப்பூர் வழியாக சென்று இலக்கை அடையலாம்.

> இதேபோல் கிரீன்வேஸ் பாயிண்டில் இருந்து வரும் வாகனங்கள் மந்தைவெளி ஆர்.ஏ. புரம் 2வது பிரதான சாலை, TTK சாலை, RK சாலை, அண்ணாசாலை வழியாக சென்று இலக்கை அடையலாம்.

> காமராஜர் சாலை, அண்ணாசாலை, சாந்தோம் நெடுஞ்சாலை. ஆர்.கே.சாலை. கதீட்ரல் சாலை, வாலாஜா சாலையில் வணிக வாகனங்கள் செல்ல காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது

Image

>ஏர் ஷோவை பார்வையிட வாகன ஓட்டிகள் அண்ணாசாலை, வாலாஜா சாலை மற்றும் சுவாமி சிவானந்தா சாலையை பயன்படுத்துக்கொள்ளலாம்!

> சென்னை முழுவதும் சிரமமில்லாமல் பயணிக்க, MTC பேருந்துகள், மெட்ரோ ரயில்கள் மற்றும் MRTS ரயில்கள் போன்ற பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறது.

>MTC மினி பஸ் மூலம் அண்ணாசாலை மெட்ரோவில் இருந்து, ‣ சிவானந்தா சாலையில் டிவி ஸ்டேசன் வரையிலும்; ‣ வாலாஜா ரோட்டில் விக்டோரியா ஹாஸ்டல் ரோடு வரையிலும்;

‣ ஆர் கே சலையில் வி.எம் தெரு சந்திப்பு வரையிலும் பயணிகளை ஏற்றிச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன"