“மெய்யழகன்” திரைப்படத்தை மனதார பாராட்டிய மாரி செல்வராஜ்..!!
தமிழ் சினிமாவில் 96 என்ற அற்புதமான படத்தை நமக்காக இயக்கி கொடுத்தவர் தான் இயக்குநர் பிரேம் குமார் . வெறும் வசனங்களால் ரசிகர்களை கட்டிப்போட்ட அப்படம் ரசிகர்களால் மனதில் எப்போதும் மறக்க முடியாத படமாக இடம்பெற்றுள்ளது.
இதையடுத்து தற்போது பிரேம் குமார் இயக்கத்தில் உருவான திரைப்படமே மெய்யழகன் . சூர்யா மற்றும் ஜோதிகாவின் தயாரிப்பில் கார்த்தி மாற்றும் அரவிந்த் சாமியின் காம்போவில் உருவான இப்படத்தில் ஸ்ரீ திவ்யா ,தேவ தர்ஷினி , ராஜ்கிரண் , உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்
கோவிந்த் வசந்தா இசைமைத்துள்ள இப்படம் கடந்த 27.09.2024 அன்று திரையரணக்குகளில் வெளியான நிலையில் தற்போது ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.
இதுமட்டுமின்றி இப்படத்தை திரை பிரபலங்களும் சிறப்பாக கொண்டாடி வரும் நிலையில் தற்போது மெய்யழகன் திரைப்படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் மனதார பாராட்டியுள்ளார்.
மெய்யழகன் திரைப்படம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மாரி செல்வராஜ் கூறிருப்பதாவது :
மெய்யழகன் பார்த்தேன். மனித வாழ்வின் ஏக்கமே பெரும் ப்ரியத்தில் உருகி வழிவது தான் என்பதை எந்த சமரசமும் இல்லாமல் நிரூபித்து இருக்கிறார்கள். சாத்தியப்படுத்திய படக்குழுவினருக்கு என் வாழ்துகளும் ப்ரியமும் என பதிவிட்டுள்ளார்.
மெய்யழகன் பார்த்தேன் . மனித வாழ்வின் ஏக்கமே பெரும்ப்ரியத்தில் உருகி வழிவது தான் என்பதை எந்த சமரசமும் இல்லாமல் நிரூபித்து இருக்கிறார்கள் . ❤️❤️சாத்தியப்படுத்திய @Karthi_Offl சார் @thearvindswami சார் #PremKumar அண்ணன் மற்றும் மொத்த படக்குழுவுக்கும் என் வாழ்த்துக்களும் ப்ரியமும்… pic.twitter.com/1SflULctf1
— Mari Selvaraj (@mari_selvaraj) September 28, 2024