திருச்சியில் பட்டாசு வெடித்தவாறு பைக்கில் வீலிங் செய்த மணிகண்டன் கைது

 
மணிகண்டன்

திருச்சியில் பட்டாசு வெடித்தவாறு பைக்கில் வீலிங் செய்த சம்பவத்தில் முக்கிய நபரான மணிகண்டன் கைது செய்யப்பட்டார்.

பைக்கில் வீலிங் செய்து கொண்டே பட்டாசு வெடித்த சம்பவத்தில் ஒருவர் கைது

திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் பைக் வீலிங் செய்து கொண்டே இளைஞர்கள் பட்டாசு வெடித்தனர். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. இந்த நிலையில் திருச்சி மாநகரில் பைக் வீலிங் செய்வது தொடர்பாக இன்று போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்தவாறு பட்டாசு வெடித்த தஞ்சாவூரை சேர்ந்த மணிகண்டன் என்பவர் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பாக திருச்சியில் ஏற்கனவே 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேசமயம் வீலிங் செய்து பொதுமக்களை அச்சுறுத்தும் இளைஞர்கள் மீது புகார் அளிக்க இலவச எண் அறிவிக்கப்பட்டுள்ளது. சமயபுரம் அருகே பட்டாசுகளை இருசக்கர வாகனத்தில் கட்டிக்கொண்டு இளைஞர்கள் வீலிங் செய்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கும் விதமாக 9487464651 என்ற எஸ்பி அலுவலகத்தின் பிரத்யேக எண்ணுக்கு புகார் அளிக்கலாம் என திருச்சி மாவட்ட காவல்துறை அறிவிக்கப்பட்டுள்ளது. வீலிங் விவகாரத்தில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மாவட்ட காவல்துறை இலவச புகார் எண்ணை அறிவித்துள்ளது