தள்ளிபோகிறது சிம்புவின் மாநாடு திரைப்படம்! ரசிகர்கள் அதிர்ச்சி

 
manadu

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் மாநாடு படத்தை ஆந்திரா, தெலுங்கானா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் நவம்பர் 25 ஆம் தேதி வெளியாகவிருந்தது. சிம்பு இதுவரை நடித்தப் படங்களில் அதிக வசூலை பெறப்போகும் படமாக மாநாடு இருக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது. அந்த படத்துக்கான டிக்கெட்டுகளும் விற்றுத்தீர்ந்தன. 

சிம்புவின் மாநாடு மீண்டும் தொடங்குகிறதா? | Dinamalar
இந்நிலையில் மாநாடு படத் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில், “நிறைய கனவுகளோடு படைக்கப்பட்ட ஓர் படைப்பு. இதின் பிரசவத்தை எதிர்நோக்கிக் காத்திருந்திருந்தேன். தவிர்க்க இயவாத காரணங்களால் #மாநாடு வெளியீடு தள்ளி வைக்கப்படுகிறது என்பதை மிகுந்த வலியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.  வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கிறேன்ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.


முன்னதாக மாநாடு படப்பிடிப்புக்கு சிம்பு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று அந்த படத்தை வேறு நடிகரை வைத்து எடுக்கப்போவதாக படக்குழு அறிவித்தனர். அதன்பிறகு மாநாடு படத்திற்கு பதிலடியாக மகாமாநாடு என்ற படத்தை தானே இயக்கி நடிக்கப்போவதாக சிம்பு அறிவித்தார். பல்வேறு சர்ச்சைக்கு பின் ஒருவழியாக தயாரிப்பாளர் சங்கத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில்  முடிவு எட்டப்பட்டு, மாநாடு பிரச்னை முடிந்து படம் வெளியாவிருந்தது.