குரங்குகளுக்கு உணவளித்தவருக்கு ரூ.10,000 அபராதம்

 
ச் ச்

குரங்குக்கு உணவளித்து வீடியோ வெளியிட்ட டாட்டூஸ் ஷாப் உரிமையாளருக்கு பத்தாயிரம் அபராதம் விதித்து வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இன்ஸ்டாகிராம் மற்றும் youtube மோகத்தால் லைக், கமெண்ட் மற்றும் பாலோவர்ஸ்-க்காக ஆசைப்பட்டு இளைஞர்கள் பலரும் செல்லும் இடங்களில் எல்லாம் வீடியோ பதிவிட்டு சமூக வலைதளங்களில் பதிவு ஏற்றி வரும் நிலையில், ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள தம்மங்கரடு பகுதியை சேர்ந்த வாலிபர்  ஜெயச்சந்திரன் என்பவர் அந்தியூரில் டாட்டூஸ் ஷாப் ஒன்றை வைத்து நடத்தி வரும் இவர் டாட்டூஸ் வீடியோக்களை அதிக அளவில் instagram-மில்  பதிவிட்டு  கணிசமான ஃபாலோயர்களை வைத்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று அந்தியூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில்  விட்டுவிட்டு  அவ்வப்போது மழை பெய்து வந்த நிலையில், நம்ம பெருமை நம்ம ஹில்ஸ் என பர்கூர் மலைக்கு சென்று டீ குடிக்க செல்வோமா, என மலைப்பாதையில் பயணத்தை  வீடியோவுடன் தொடங்கி நண்பர்களுடன் சேர்ந்து ஆட்டம் பாட்டம் போட்டு விட்டு வனப்பகுதியில் மலைப்பாதையில் அமர்ந்திருந்த குரங்குகளுக்கு பிஸ்கட்களை உணவாக அளித்து அதனை வீடியோவாக  தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவேற்றி உள்ளார்.

இந்த நிலையில் இந்த வீடியோ வைரலான நிலையில் வீடியோ  வெளியிட்ட  ஜெயச்சந்திரனை அந்தியூர் வனச்சரக அலுவலகம்  வரவழைத்த வனத்துறையினர் அவர்  மீது வன குற்ற வழக்கு பதிவு செய்து  ரூபாய் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து அபராத தொகையை வசூலித்தனர். தொடர்ந்து, இன்ஸ்டாகிராம் மற்றும் youtube பக்கத்தில் இருந்து அந்த வீடியோவை நீக்கினர். இனிவரும் காலங்களில் அத்துமீறி செயல்பட கூடாது என வனத்துறையினர் வாலிபரை எச்சரித்தனர். தொடர்ந்து அந்த வாலிபர் நான் செய்தது தவறு மேலும் மலைப்பகுதிக்கு செல்லும் நபர்கள் வனவிலங்குகளை அச்சுறுத்தக் கூடாது எனவும், உணவளிக்கக்கூடாது எனவும் வனத்துறை சார்பில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மீறாமல் இருக்க வேண்டும் எனவும் அந்த வாலிபர் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.