மனைவிக்காக ரூ.418 கோடிக்கு தனித்தீவை விலைக்கு வாங்கிய கணவர்..!
இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் சவுதி அல் நடாக் (26). துபாய்க்கு படிக்க சென்ற இடத்தில் தொழிலதிபரான ஜமால் அல் நடாக் என்பவரை சந்தித்திருக்கிறார். இவர்களுக்குள் காதல் மலர்ந்து 3 ஆண்டுகளுக்கு முன் திருமணமும் செய்து கொண்டனர். தொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட பின்பு, இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்டாக் போன்ற சமூக ஊடகங்களில் தன்னுடைய ஆடம்பர வாழ்க்கை முறையை வீடியோவாக காட்சிப்படுத்தினார்.
இதனால், பிரபலமடைந்து இருக்கிறார். இந்த தம்பதி ரூ.8.36 கோடி (10 லட்சம் டாலர்) மதிப்பிலான வைரம் ஒன்றை வாங்கியது. இதன்பின்பு, ரூ.16.72 கோடி (20 லட்சம் டாலர்) மதிப்பிலான கலை படைப்பு ஒன்றையும் அந்த தம்பதி வாங்கி சென்றது. ஒரே நாளில் வாங்கிய இவற்றை பற்றிய வீடியோ வைரலானது.
இதேபோன்று, அதிக விலை கொண்ட பெராரி கார், ஆடம்பர உணவு, முதல் வகுப்பு விமான பயணம், ஆடம்பர காபி என பல விலையுயர்ந்த பொருட்களை அவர்கள் இருவரும் சேர்ந்து வாங்கிய பல வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களையும் சவுதி பகிர்ந்து உள்ளார்.
இந்நிலையில், சவுதி பேட்டி ஒன்றில் கூறும்போது, பீச்சில் தளர்வான ஆடை அணிந்தபடி இருக்க விரும்பினேன். ஆனால், அந்த ஆடையில் இருக்கும்போது, பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டும். அதனால், என்னுடைய கணவர் பீச் ஒன்றை விலைக்கு வாங்கி விட்டார். ஏதேனும் முதலீட்டு காரணங்களுக்காகவும் நாங்கள் செலவு செய்வது என திட்டமிட்டபடி இருந்தோம். தளர்வான ஆடையை அணிந்து பாதுகாப்பாக நான் உணர வேண்டும் என்றும் அவர் விரும்பினார்.
அதனால், அவர் அந்த தீவை வாங்கி விட்டார் என கூறியுள்ளார். எனினும், தனியுரிமை மற்றும் பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு, அந்த தீவு பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை. அந்த தீவு ஆசியாவில் உள்ளது என சவுதி கூறியுள்ளார். அதன் விலை இந்திய மதிப்பில் ரூ.418 கோடி (50 லட்சம் டாலர்) ஆகும். அது எந்த இடம் என்பது பற்றிய விவரங்களை வெளியிடாதபோதும், இன்ஸ்டாகிராம் பதிவுகளை அடிப்படையாக கொண்டு ரசிகர்கள் அது எந்த பகுதியில் உள்ளது என ஆராய்ந்து வருகின்றனர்.
இதுபற்றி இன்ஸ்டாகிராமில் சவுதி வெளியிட்ட வீடியோ ஒன்றில், பிகினி உடை அணிய விரும்பியதற்காக, கோடீசுவர கணவர் ஒரு தீவையே வாங்கி விட்டார். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர் என அவர் பதிவிட்டு இருக்கிறார்.