எடப்பாடி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் : கையும் களவுமாக சிக்கிய நபர்!

 

எடப்பாடி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் : கையும் களவுமாக சிக்கிய நபர்!

முதல்வர் பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் சேலத்தில் கைது செய்யப்பட்டார்.

அண்மைக்காலமாக சினிமா பிரபலங்களின் இல்லங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வருவது வாடிக்கையாகி விட்டது. நடிகர் ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட பலர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தாலும் பின்னர் அது வெறும் புரளி என கண்டுபிடிக்கப்படும். அந்த வகையில், நேற்று முதல்வர் பழனிச்சாமியின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

எடப்பாடி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் : கையும் களவுமாக சிக்கிய நபர்!

முதல்வரின் சென்னை இல்லத்திலும் சேலம் இல்லத்திலும் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல் துறையின் அவசர எண் 100-க்கு அழைப்பு வந்தது. அந்த தகவலின் பேரில், தீவிர சோதனை மேற்கொண்ட போலீசார் அது வெறும் வதந்தி என்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து, வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை தேடும் பணியில் போலீசார் அதிரடியாக ஈடுபட்டனர்.

இந்த நிலையில், சேலத்தில் பதுங்கி இருந்த அன்பழகன் என்பவர் போலீசார் வசம் சிக்கியிருக்கிறார். திருவண்ணாமலை அருகே உள்ள செய்யூரை சேர்ந்த அவர் குடிபோதையில் முதல்வரின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.