17 வயது சிறுமியை கட்டாய திருமணம் செய்து வன்கொடுமை செய்த இளைஞர் கைது!

 
Child marriage

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில்17 வயது சிறுமியை கட்டாய திருமணம் செய்து பத்து மாத காலமாக பாலியல் வன்புணர்வு செய்து கொடுமைப்படுத்தியதாக சம்பந்தப்பட்ட சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில் சிறுமியை திருமணம் செய்த இளைஞர் மற்றும் அவரது தாயாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

37 வயது ஆணுடன் 17 வயது சிறுமிக்கு நடந்த கட்டாய திருமணம்..!

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பிளஸ் ஒன் படிக்கும் 11 வயது சிறுமி ஒருவரை புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சேர்ந்த சிவசிதம்பரம் என்ற 30 வயது இளைஞர் கடந்த ஜனவரி மாதம் கட்டாய திருமணம் செய்துகொண்டார். கடந்த 10 மாத காலமாக சிறுமியை அறையில் அடைத்து வைத்து பாலியல் வன்புணர்வு செய்து வந்ததாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து சம்பந்தப்பட்ட சிறுமி கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சிறுமியை சட்டவிரோதமாக கட்டாய திருமணம் செய்த சிவசிதம்பரம் மற்றும் அவரது தந்தை மலைக்கண்ணு, தாயார் சந்திரா, ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிவசிதம்பரம் மற்றும் அவரது தாயார் சந்திரா ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சிவசிதம்பரத்தின் தந்தை மலைக்கண்ணுனு போலீசார் தேடி வருகின்றனர்.