இப்படியா சாவு வரணும்... கணவன் கண் முன்னே துடிதுடித்து பலியான மனைவி

கூடுவாஞ்சேரி அருகே இருசக்கர வாகனத்தில் சிக்னலில் நின்று கொண்டிருந்த கணவன் மனைவி மீது லாரி மோதிய விபத்தில் கணவன் கண் முன்னே மனைவி தலை நசுங்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பகுதியைச் சேர்ந்தவர் சம்பத் வயது (51).இவரது மனைவி சசிகலா வயது (44). இருவரும் தாம்பரத்தில் உறவினரின் நிகழ்ச்சிக்காக தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது கூடுவாஞ்சேரி அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிக்னலில் நின்று கொண்டிருந்தனர்.அப்போது சென்னை மார்க்கமாக பேப்பர் லோடு ஏற்றிச் சென்ற கண்டெய்னர் லாரி சிக்னலில் நின்று கொண்டிருந்த கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த சம்பத் மற்றும் சசிகலா மீது மோதியது. அதில் கீழே விழுந்த சசிகலா மீது லாரியின் பின் சக்கர டயர் ஏறி இறகியதில் கணவன் முன்னே மனைவி சசிகலா தலை நசுங்கி உயிரிழந்தார்
#JUSTIN
— News18 Tamil Nadu (@News18TamilNadu) February 3, 2025
கூடுவாஞ்சேரி அருகே சிக்னலில் நின்று
கொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து...
கணவன் கண் முன்னே மனைவி இறந்த சோகம்#Chengalpattu #Accident #News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ pic.twitter.com/KWX0nhJyl4
பின்பு விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் பிரேதத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதனைத் தொடர்ந்து விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் கருப்பசாமி வயது 20 என்பவரையும் கைது செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதி கணவன் கண்முன்னே மனைவி உயிரிழந்த சம்பவத்தின் நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.