மகாளய அமாவாசை: ஒட்டி முன்னோர்களுக்கு திதி கொடுத்து மக்கள் வழிபாடு..!

 
மகாளய அமாவாசை:  ஒட்டி முன்னோர்களுக்கு திதி கொடுத்து மக்கள் வழிபாடு..!

புரட்டாசி மாத மகாளய அமாவாசையை முன்னிட்டு  ஏராளமான பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்து வழிபாடு செய்து வருகின்றனர்.  

ஒவ்வொரு மாதமும் அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு விரதமிருந்து வழிபடுவது வழக்கம் தான் என்றாலும், புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை விசேஷமானது. முன்னோர்களின் திதி தெரியாதவர்கள், திதி கொடுக்காதவர்கள் புரட்டாசி மாதத்தில்  வரும் இந்த மகாளய அமாவசை தினத்தின் தர்ப்பண கொடுத்து வழிபடுவர்.  அதன்படி இன்று மகாளய அமாவாசையை முன்னிட்டு, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக ஏராளாமானனோர் நீர் நிலைகளில் குவிந்துள்ளனர்.  

Image

அதிகாலை முதலே நீர் நிலைகளில் புனித நீராடி முன்னோர்களுக்கு எள்ளுபிண்டம் வைத்து தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். அந்தவகையில் சென்னை திருவொற்றியூர் கடற்கரை பகுதி, மயிலாப்பூர் கபாலீஸ்வர் கோயில் தெப்பக்குளம், கடற்கரைகள், காரைக்குடி, கோவிலூர் கொற்றாளீஸ்வரர் கோவில்  குளக்கரை, காவிரி-பவானி நதிகள் சங்கமிக்கும், பவானி கூடுதுறை, ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடல்,  கடலூர் வெள்ளி கடற்கரை உள்ளிட்ட பல்வேறு நீர்நிலைகளில் மக்கள் தர்ப்பணம் செலுத்தினர்.