அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது!

 
திருவண்ணாமலை தீபம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலின் திரு கார்த்திகை தீபத்திருவிழா நவம்பர் 10 ஆம் தேதி  கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில் திருக்கார்த்திகை தீபவிழா 10 ஆம் நாளான இன்று காலை அண்ணாமலையார் சன்னதியில் ஏகன்  அனேகனாக மாறும் தத்துவத்தினை விளக்கும் விதமாக  கோவலில் உள்ள சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.   

திருவண்ணாமலை: 2,668 அடி உயர மலை உச்சியில் பிரம்மாண்ட கொப்பரையில் 11 நாட்கள்  எரியும் மகா தீபம் | Thiruvannamalai: 2,668 feet high mountain Mahadeepam on  tomorrow - Tamil Oneindia

இதனை தொடர்ந்து மாலை 5 மணியளவில் அண்ணாமலையார், உண்ணாமலையம்மன் பல்வேறு  சிறப்பு  மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு ஆலய கொடிமரத்தின் முன்பே தீப தரிசன மண்டபத்தில் தோன்றி பக்தர்களுக்கு காட்சி அளித்து தீப மண்டபத்தில் எழுந்தருளினர். இதனை தொடர்ந்து பஞ்ச மூர்த்திகள் தீப மண்டபத்தில் எழுந்தருளினர். பின்னர் சரியாக மாலை 6 மணியளவில்  ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே காட்சியளிக்கும் சிவனின் பாதி சக்தி என்பதை உணர்த்தும் வகையில் அர்ந்தநாரீஸ்வரர்  பக்தர்களுக்கு  அருள்பாளித்தார்.  அப்போது கோவிலின்  கொடி மரத்தின் அருகில் உள்ள அகண்டத்தில் தீபம் ஏற்றப்படும். 

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை உற்சவத்தையொட்டி, மகா தீபம் ஏற்றப்பட்டது. திருவண்ணாமலையின் 2,668 அடி உயர மலை உச்சியில் அமைக்கப்பட்ட கொப்பரையில் மகா தீபம் ஏற்றப்பட்டது. கற்பூர ஜோதியால் ஒற்றை நெய் தீபம் ஏற்றப்பட்டு நந்தி தேவர் முன்பு 5 பெரிய அகல் விளக்குகள் ஏற்றப்பட்டன. திருவண்ணாமலையில் தீபம் ஏற்றப்பட்டதையடுத்து அனைவரும், தங்களது வீடுகளில் தீபம் ஏற்றினார். திருவண்ணாமலை கோயில், மலையின் மீது திரண்ட பக்தர்கள் எழுப்பிய அரோகரா கோஷம் விண்ணை எட்டியது.