ரவிச்சந்திரனுக்கு பரோல் மறுக்கப்படுவது ஏன்? – நீதிமன்றம் கேள்வி!

 

ரவிச்சந்திரனுக்கு பரோல் மறுக்கப்படுவது ஏன்? – நீதிமன்றம் கேள்வி!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஏழு பேர் 28 ஆண்டுகளுக்கு மேலாக சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர். அவர்களுள் பேரறிவாளன் அடிக்கடி உடல் நிலையை காரணம் காட்டி பரோலில் சென்று வருகிறார். ஆனால் மற்றவர்களுக்கு பரோல் வழங்கப்படுவதில்லை. இந்த நிலையில் சிறையில் இருக்கும் ரவிச்சந்திரனின் தாயார் ராஜேஸ்வரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

ரவிச்சந்திரனுக்கு பரோல் மறுக்கப்படுவது ஏன்? – நீதிமன்றம் கேள்வி!

27 ஆண்டுகளுக்கு மேலாக ரவிச்சந்திரன் சிறையில் இருக்கிறார். 7 பேரை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு முடிவு எடுத்து கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்த பிறகு தமிழக அரசு தீர்மானமும் நிறைவேற்றி விட்டது. இதனால் ரவிச்சந்திரனுக்கு 3 மாதம் சாதாரண விடுப்பு வழங்க கோரி மனு அளித்தேன். அதை பரிசீலிக்க முடியாது என தமிழக அரசு தெரிவித்துவிட்டது. எனவே ரவிச்சந்திரனுக்கு 2 மாதம் சாதாரண விடுப்பு வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார். அந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள், மற்றொருவருக்கு வழங்கி இவருக்கு பரோலை மறுப்பது ஏன்? அதில் என்ன சிக்கல்? என்று கேள்வி எழுப்பினர். மேலும், இது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.