திமுகவின் ஊழல் பணத்தை மீட்டெடுத்தாலே, மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்களைச் செயல்படுத்திவிடலாம் - எடப்பாடி பழனிசாமி..!

 
1 1
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,

டெண்டர் எடுப்பதில் ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை, தமிழக பொறுப்பு டி.ஜி.பி.க்கு கடிதம் எழுதியுள்ளதாகக் கூறியுள்ளார். இது கழிப்பறை கட்டுவது முதல், நபார்ட் வங்கி திட்டங்கள் வரை மெகா ஊழல் நடைபெற்றுள்ளதை காட்டுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

விஞ்ஞான ஊழல்களுக்குப் பெயர்போன திமுகவின் ஸ்டாலின் மாடல் ஆட்சி வெறும் கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன் மாடல் தான் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

திமுக அமைச்சரவை கொள்ளையடித்த ஊழல் பணத்தையெல்லாம் மீட்டெடுத்தாலே, தமிழகத்திற்கு தேவையான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்திவிடலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின், திமுகவின் ஊழல் கரைவேட்டிகள் யாராக இருந்தாலும், கம்பி எண்ணப் போவது உறுதி என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.