திட்டமிட்டபடி நாளை வெளியாகிறது மாநாடு!

 
maanaadu

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கியுள்ள திரைப்படம் மாநாடு. இப்படத்தில் சிம்பு கதாநாயகனாக நடித்துள்ளார். ஊரடங்கு காரணமாக, மாநாடு திரைப்படம் வெளியீடு தள்ளிக்கொண்டே போனது. தீபாவளியை முன்னிட்டு 100 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகளைத் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்ததையடுத்து, திரைப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டது. மாநாடு வெளியீடு தள்ளி வைக்கப்படுவதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்திருந்தார். 

Maanaadu

இந்நிலையில் நடிகர் சிம்புவின் மாநாடு திரைப்படம் திட்டமிட்டபடி, நாளை வெளியாகும் என இயக்குநர் வெங்கட் பிரபு டிவிட்டர் அறிவித்துள்ளார்.

முன்னதாக மாநாடு படப்பிடிப்புக்கு சிம்பு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று அந்த படத்தை வேறு நடிகரை வைத்து எடுக்கப்போவதாக படக்குழு அறிவித்தனர். அதன்பிறகு மாநாடு படத்திற்கு பதிலடியாக மகாமாநாடு என்ற படத்தை தானே இயக்கி நடிக்கப்போவதாக சிம்பு அறிவித்தார். பல்வேறு சர்ச்சைக்கு பின் ஒருவழியாக தயாரிப்பாளர் சங்கத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில்  முடிவு எட்டப்பட்டு, மாநாடு பிரச்னை முடிந்து படம் வெளியாவிருந்தது.