ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ரூ. 65 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

 
மா

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்துக்குப் பதிலாக  ரூ.65 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்  விளக்கம் அளித்துள்ளார்.  

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ரூ. 65 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழக சட்டப்பேரவையில் இன்று சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியிருந்தார்.  அதன்பிறகு பல்வேறு சலசலப்புகளைத் தொடர்ந்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் விளக்கம் அளித்து பேசினார். அப்போது,    ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள நரம்பியல் பிரிவில் மின்கசிவு காரணமாகவே தீ விபத்து  ஏற்பட்டதாக கூறினார். தீ விபத்து ஏற்பட்ட கட்டிடம் 105 ஆண்டுகள் பழைமையானது என்றும் தெரிவித்தார்.    அரசின் துரித நடவடிக்கையால் 128 உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும்,  கடந்த 10 ஆண்டுகளாக சரிவர கவனிக்காததே இதற்கு காரணம் என்றும்  குறிப்பிட்டார்.  

ராஜீவ் காந்தி மருத்துவமனை

இப்போது அந்தக் கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடத்தைக் கட்ட திட்ட மதிப்பீடு தயார் செய்யுமாரு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாகவும், அதன்படி  திட்ட மதிப்பீடு தயார் செய்யப்படுள்ளதாகவும் கூறினார்.  இதனையடுத்து தீ பிடித்த கட்டிடத்தை  இடித்துவிட்டு  ரூ.65 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக கூறினார். தொடர்ந்து பேசிய அவர், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை  கட்டிடத்தை கட்டியது கலைஞர் என்றும்,  அதற்கு சுண்ணாம்பு அடித்து திறந்து வைத்தது மட்டுமே அதிமுக என கூறினார். மேலும் அந்த மருத்துவமனைக்கு ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை என பெயர் வைத்தது கலைஞர் தான் எனவும்,  தாங்கள் கட்டியது என்று எதிர்கட்சி தலைவர் கூறியது அபத்தம் என்றும்  குற்றம் சாட்டினார்.