செப்டம்பர் இறுதியில் உள்ளாட்சி தேர்தலா?

 

செப்டம்பர் இறுதியில் உள்ளாட்சி தேர்தலா?

9 மாவட்டங்களில் செப்டம்பர் மாத இறுதியில் உள்ளாட்சி தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன.

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. இந்த மாவட்டங்களில் விரைவில் தேர்தல் நடத்தக் கோரி தொடரப்பட்ட வழக்கில் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

செப்டம்பர் இறுதியில் உள்ளாட்சி தேர்தலா?

நீதிமன்ற உத்தரவின் படி, குறிப்பிட்ட காலத்திற்குள் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. அரசியல் கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தமாகி வருகின்றன. இந்த நிலையில், செப்டம்பர் மாத இறுதியில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. இம்மாத இறுதிக்குள் அதற்கான அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது. தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் வியூகங்களை வகுத்து இருக்கும் நிலையில் இந்த தேர்தலில் கடுமையான போட்டி இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.