ஓபிஎஸ் – ஈபிஎஸ் முக்கிய ஆலோசனை :எஸ்.பி. வேலுமணி பங்கேற்பு!

 

ஓபிஎஸ் – ஈபிஎஸ் முக்கிய ஆலோசனை :எஸ்.பி. வேலுமணி பங்கேற்பு!

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக 2வது நாளாக மாவட்ட நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் – ஈபிஎஸ் இருவரும் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

ஓபிஎஸ் – ஈபிஎஸ் முக்கிய ஆலோசனை :எஸ்.பி. வேலுமணி பங்கேற்பு!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலுக்குத் தயாராகும் வகையில், நேற்று அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடைபெற்றது.

ஓபிஎஸ் – ஈபிஎஸ் முக்கிய ஆலோசனை :எஸ்.பி. வேலுமணி பங்கேற்பு!

இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக 2வது நாளாக மாவட்ட நிர்வாகிகளுடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகின்றனர். நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்ட நிர்வாகிகளுடன் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஈபிஎஸ் – ஓபிஎஸ் ஆலோசனை நடத்துகின்றனர். விடுபட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் ஆலோசனை நடைபெறுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் டெண்டர் முறைகேடு விவகாரத்தில் சிக்கி லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரால் சோதனைக்கு ஆளாக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியும் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.