'ஆதிக்க கலாசாரத்தை தகர்த்தெறிய என்னால் இயலவில்லை ' - நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி

 
ttn

நேரில் சொல்லாமல் விடை பெற்றதற்கு மன்னியுங்கள் என சக நீதிபதிகள், வழக்கறிஞர்களுக்கு சஞ்ஜிப் பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.

sanjib

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி,  மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றப்பட்ட நிலையில் திடீரென சென்னையிலிருந்து புறப்பட்ட நிலையில் உருக்கமான கடிதம் எழுதியுள்ளார்.    நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி சக நீதிபதிகள் வழக்கறிஞர்களுக்கு கடிதம் எழுதிய கடிதத்தில், நாட்டிலேயே சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் தான் சிறப்பானவர்கள்.
அழகான மாநிலமான தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒவ்வொருவருக்கும் கடன்பட்டுள்ளேன்; எனது சொந்த மாநிலம் என 11 மாதங்களாக சொல்லிக் கொண்டிருந்த மகிழ்ச்சியிலேயே உங்களிடமிருந்து விடைபெறுகிறேன்.  தனிப்பட்ட முறையில் உங்களிடம் விடைபெறாமல் செல்வதற்காக மன்னியுங்கள்; என் மீதான உங்களின் அளவுகடந்த அன்பினால் பூரித்து போயிருக்கிறேன். விடைபெறாமல் சென்றதற்கு மன்னியுங்கள். என் முடிவுகள் அனைத்து நீதிமன்றம் நலனுக்கானதே தவிர, தனிப்பட்ட காரணமல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.

court

தொடர்ந்து பேசிய அவர், ஆதிக்க கலாசாரத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறீர்கள்; முழுமையாக தகர்த்தெறிய என்னால் இயலவில்லை. என்னுடைய நடவடிக்கைகள் புண்படுத்தி இருந்தால் அது தனிப்பட்ட முறையில் ஆனதல்ல நீதிமன்றத்தின் நலனுக்கானது. என் மீதான உங்களின் அளவு கடந்த அன்பினால் பூரித்துப் போயிருக்கிறேன்.  திறமையான நிர்வாகத்தை மேற்கொள்ள உதவியாக இருந்த பதிவு துறைக்கும் நன்றி என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் பானர்ஜி மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றப்பட்ட நிலையில் திடீரென சென்னையிலிருந்து புறப்பட்ட நிலையில் உருக்கமான கடிதம் எழுதியுள்ளார்.