சட்டமன்ற உறுப்பினர் அலுவலகங்கள் பூட்டி சீல் வைப்பு

 

சட்டமன்ற உறுப்பினர் அலுவலகங்கள் பூட்டி  சீல் வைப்பு

சட்டமன்ற உறுப்பினர்களின் அலுவலகங்களை பூட்டி சீல் வைக்கும் பண்யில் அதிகாரிகள் தீவிரமாக உள்ளனர்.

சட்டமன்ற உறுப்பினர் அலுவலகங்கள் பூட்டி  சீல் வைப்பு

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் 6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது என்று மாநில தேர்தல் ஆணையம் கடந்த 13ஆம் தேதி என்று அறிவித்தது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பின்னர் 9 மாவட்டங்களிலும் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்து விட்டன . இதை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகளை இந்த ஒன்பது மாவட்டங்களிலும் உள்ள நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகங்களை பூட்டி சீல் வைக்கப்பட வேண்டும்.

அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் 7 சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அலுவலகங்களையும் பூட்டி சீல் வைக்கும்படி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு மாவட்ட தேர்தல் அதிகாரிகள், ஆட்சியர் டி. மோகன் உத்தரவிட்டிருந்தார். அதன்படி விழுப்புரம் அலுவலக பெருந்திட்ட வளாகம் அருகே உள்ள விழுப்புரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தினை விழுப்புரம் தாசில்தார் வெங்கடசுப்ரமணியன், மண்டலத் துணை இயக்குநர் பூட்டி சீல் வைத்தனர். மற்ற சட்டமன்ற தொகுதிகள் திண்டிவனம், வானூர், விக்கிரவாண்டி, மயிலம், செஞ்சி, திருக்கோவிலூர் ஆகிய சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அலுவலகங்ளையும் பூட்டி சீல் வைக்கும் பணியில் தேர்தல் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.