சிறுநீரகம் கொடுத்து எம்ஜிஆரை வாழ வைத்த லீலாவதி மறைந்தார் - தொண்டர்கள் கதறல்!

 
லீலாவதி

மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆரின் மூத்த சகோரதரர் சக்கரபாணி மகள் லீலாவதி சென்னையில் இன்று காலமானார். சில நாட்களுக்கு முன்னர் திடீர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 2 மணிக்கு லீலாவதியின் உயிர் பிரிந்தது. இவரின் மறைவு எம்ஜிஆர் விசுவாசிகள், அதிமுக தொண்டர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.லீலாவதி

ஏனென்றால் 1984ஆம் ஆண்டு எம்ஜிஆர் அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். அப்போது அவருக்கு சிறுநீரகம் தேவைப்பட்டது,சித்தப்பாவுக்காக தன்னுடைய ஒரு சிறுநீரகத்தை நன்கொடை அளித்தவர் லீலாவதி. இவர் அண்மையில்தான் பாஜகவில் இணைந்தார். இவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ஓபிஎஸ், எடப்பாடி கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில், ''லீலாவதி அம்மையார் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி மரணமடைந்துவிட்டார்.

மின்னம்பலம்:எம்ஜிஆர் சிகிச்சை: அப்போலோ டு அமெரிக்கா நடந்தது என்ன?

இச்செய்தி கேட்டு ஆற்றொணா துயரமும், மிகுந்த மனவேதனையும் அடைந்தோம். எம்ஜிஆருக்கு சிறுநீரகம் அளித்து வாழவைத்த லீலாவதி அம்மையார் 37 ஆண்டுகள் இப்பூவுலகில் ஒரு சிறுநீரகத்தோடு வாழ்ந்து இன்று இயற்கை எய்தியதை அறிந்த எம்ஜிஆரின் கோடானுகோடி அன்புத் தொண்டர்கள் அனைவரது நெஞ்சங்களும் மிகுந்த வேதனை கொள்கிறது. லீலாவதி அம்மையாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும் இந்தத் துயரத்தைத் தாங்கிக்கொள்ளக்கூடிய சக்தியையும் தைரியத்தையும் அளிக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.