"பிப்ரவரிக்குள் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் விநியோகம்"
கல்லூரி மாணவ,மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தை அடுத்த மாதம் தொடங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

தமிழக அரசின் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், தமிழகத்தில் பல்வேறு கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம், வேளாண்மை உள்ளிட்ட அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் உயர் தொழில்நுட்ப சாதனங்களை வழங்க திட்டமிடப்பட்டு, முதல்கட்டமாக அடுத்த 2 ஆண்டுகளில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு அவரவர் விருப்பத்தின் அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் கைக்கணினி (டேப்லெட்) அல்லது மடிக்கணினி (லேப்டாப்) வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதன்படி, முதல் கட்டமாக 10 லட்சம் மடிக்கணினிகளை கொள்முதல் செய்ய எச்பி, டெல், ஏசர் ஆகிய மூன்று நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசுக்கு ஆணை வழங்கியுள்ளது. இந்த மடிக்கணினி மாதிரி மற்றும் அதில் இடம்பெறும் தொழில்நுட்ப அம்சங்களை பார்த்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் இறுதி செய்துள்ளார். இந்நிலையில் மடிக்கணினி வழங்கும் திட்டம் தொடர்பாக உயர்மட்ட குழு கூட்டம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில் நிறுவனங்களிடம் முதல் கட்டமாக குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மரக்கணினிகள் இந்த மாதம் இறுதியில் தமிழக அரசிடம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதன்படி, கல்லூரி மாணவ,மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தை அடுத்த மாதம் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி என்று 3 மாதங்களில் 10 லட்சம் பேருக்கு மடிக்கணினி வழங்கும் பணியை முடிக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த கூட்டத்தில் இது இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது


