மூணாறு சாலைகளில் மண் சரிவு- வாகன போக்குவரத்து முற்றிலும் துண்டிப்பு

 
மூணாறு சாலைகளில் மண் சரிவு- வாகன போக்குவரத்து முற்றிலும் துண்டிப்பு

உடுமலையில் இருந்து மூணாறு செல்லும் சாலையில் நிலச்சரிவு வாகனங்கள் செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளான.

Image

கேரள மாநிலம் இடுக்கியில் உள்ள மூணாறு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு, சாலைகளில் பெரிய பாறைகள் விழுந்துள்ளதால், மூணாறு பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு செல்லும் பாதை மூடப்பட்டுள்ளது.


இதேபோல் கேரளா மூணாறில் தொடர் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டதால் சாலைகள் முழுமையாக சேதம் அடைந்ததால் வாகனங்கள் செல்ல முடியாமல் தவித்துவருகின்றன. மூணாறில் இருந்து தமிழக பகுதியான திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் கொச்சி, தேனி, வரும் சாலைகள் அனைத்தும் மண் சரிவால் பாதிக்கப்பட்டுள்ளன. இதேபோல் தமிழகத்தில் இருந்து உடுமலை, போடி, குமுளி வழியாக மூணாறு செல்லும் சாலைகளில் மண் சரிவு ஏற்பட்டதால் வாகன போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளன.