கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி காலவரையறையின்றி மூடல்..

 
கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி காலவரையறையின்றி மூடல்..

கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி காலவரையறையின்றி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் தமிழ்த்துறை முதுகலை இரண்டாம் ஆண்டு  வகுப்பில் பேராசிரியை ஒருவர், மாணவர்களிடையே ஜாதி பிரிவினை பற்றி பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.  இதனைக் கண்டித்து கடந்த ஆக.8ம் தேதி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். அதன் பின்னர் அந்த ஆசிரியை  விடுப்பில் சென்றுவிட்டார். ஆனாலும் பேராசிரியர் மீது துறை ரீதியாக பணியிடை நீக்கம், இடமாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

கும்பகோணம் கல்லூரி

 கடந்த 6 நாட்களாக மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் கல்லூரி, காலவரையின்றி  மூடப்பட்டுள்ளது. இதுகுறித்து கல்லூரி முதல்வர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், கல்லூரியின் அசாதாரண சூழல் கருதி கல்லூரி ஆட்சிமன்றக் குழுவின் தீர்மானத்தின்படி மறு உத்தரவு வரும் வரை கல்லூரி காலவரையின்றி மூடப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.