காதலனுக்கு விஷம் கொடுத்த காதலி.. வெளியான பகீர் தகவல்.. தற்கொலை முயற்சியால் பரபரப்பு..

 
 காதலனுக்கு விஷம் கொடுத்த காதலி.. வெளியான பகீர் தகவல்..  தற்கொலை முயற்சியால் பரபரப்பு..

களியக்காவிளை அருகே  காதலனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த இளம்பெண், கிருமிநாசினி குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

கன்னியாக்குமரி எல்லையில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் பாறசாலையைச் சேர்ந்த ஜெயராஜ் என்பவரது மகன்  ஷாரோன் ராஜ்(23). பி.எஸ்சி மூன்றாம் ஆண்டு படித்து வந்த ஷாரோன் ராஜ்,  களியக்காவிளை அருகே ராமவர்மன்சிறை பகுதியைச் சேர்ந்த  கீரிஷ்மா  என்கிற பெண்ணை  காதலித்து வந்துள்ளார். அந்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் நிச்சயம் செய்யப்பட்டிருக்கும் நிலையில், வீட்டுக்குத் தெரியாமல் அவர்  ஷாரோன் ராஜை  காதலித்து வந்திருக்கிறார். இருவரும் வெட்டுக்காடு சர்ச்சில் ரகசியமாகத் திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது.  

 காதலனுக்கு விஷம் கொடுத்த காதலி.. வெளியான பகீர் தகவல்..  தற்கொலை முயற்சியால் பரபரப்பு..

ஷாரோன் ராஜிக்கு கல்லூரி சம்பந்தப்பட்ட ரெக்கார்ட் நோட்டுக்கள் எழுதி கொடுப்பது போன்ற உதவிகளை அந்தப்பெண் செய்து வந்திருக்கிறார். அந்தவகையில் கடந்த 14ம் தேதி  இரண்டு நோட்டுக்களை எழுதி முடித்து வைத்திருப்பதாகக் கூறி ஷாரோனை தனது வீட்டிற்கு அழைத்திருக்கிறார். அதன்படி, ஷாரோன் ராஜ் தனது நண்பரின் பைக்கில் காதலியின் வீட்டுக்குச் சென்றுள்ளார். நண்பர் வெளியே பைக்கில் காத்திருக்க, ஷாரோன்ராஜ் மட்டும் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்.  அப்போது அப்பெண்ணின் பெற்றோர் வீட்டில் இல்லை என கூறப்படுகிறது.  பின்னர்  நண்பருடன் சென்றுகொண்டிருந்த போது  ஷாரோன் ராஜ் வாந்தி எடுத்திருக்கிறார்.
 
இதுகுறித்து அவர் நண்பர் கேட்டதற்கு, கீரிஷ்மா  கொடுத்த ஜூஸ் குடித்தது ஒத்துக்கொள்ளவில்லை எனக் கூறியிருக்கிறார் ஷாரோன் ராஜ். பின்னர் வீட்டிற்குச் சென்றதும் அவரது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து,  பாறசாலையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக  திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சையில் இருந்த ஷாரோன் ராஜின் உள்ள உறுப்புகள் செயல் இழந்து போயுள்ளன. அப்போது அவர் ஆசிட் போன்ற விஷம் குடித்திருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

 காதலனுக்கு விஷம் கொடுத்த காதலி.. வெளியான பகீர் தகவல்..  தற்கொலை முயற்சியால் பரபரப்பு..
 
இதுகுறித்து ஷாரோன் ராஜின் தந்தை புகார் அளித்ததன்பேரில்,  மஜிஸ்திரேட் மருத்துவமனையில் சென்று வாக்குமூலம் பெற்றுள்ளார். அப்போது ஷாரோன், அந்த இளம் பெண் கசப்பான மருந்து குடித்து வருவதாக சொன்னதாகவும்,  அது எப்படி இருக்கும் என வாங்கி குடித்து பார்த்ததாக ஷாரோன் ராஜ் கூறியுள்ளார். கசப்பை போக்க அந்த பெண் ஜூஸ் கொடுத்ததாகவும், அதன் பிறகு உடல்நிலை சரியில்லாமல் போனதாகவும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் கடந்த 25-ம் தேதி ஷாரோன் ராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 காதலனுக்கு விஷம் கொடுத்த காதலி.. வெளியான பகீர் தகவல்..  தற்கொலை முயற்சியால் பரபரப்பு..

பின்னர் இதுகுறித்து கிரீஷ்மாவிடம் விசாரணை நடத்தியதில்,   தான் குடித்து வந்த மருந்தைதான் ஷாரோன் ராஜிக்கு கொடுத்ததாகவும், ஜூஸில் வேறு எதுவும் கலக்கவில்லை எனவும்  தெரிவித்தார்.  இந்நிலையில் இளம் பெண் மற்றும் இறந்த வாலிபரின் செல்போன் உரையாடல்கள் மற்றும் வாட்ஸப் சாட்டிங்  உள்ளிட்ட ஆதாரங்களை கைப்பற்றி பாறசாலை  போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர்.   இந்த நிலையில் வழக்கு கேரள  க்ரைம் பிராஞ்சுக்கு மாற்றப்பட்டது. கிரீஷ்மாவிடமும், அவரின் பெற்றோரிடமும் க்ரைம் பிராஞ்ச் போலீஸார் நேற்று விசாரணை நடத்தினர்.  

அப்பொது   தனது மாமா பயன்படுத்திவந்த களைக்கொல்லி பூச்சிமருந்தை கஷாயத்தில் கலந்து ஷாரோன் ராஜுக்குக் கொடுத்ததாக கிரீஷ்மா ஒப்புக்கொண்டிருக்கிறார். தனது போட்டோக்கள் ஷாரோன் ராஜிடம் இருந்ததால் அவரைக் கொலைசெய்ததாகவும் கூறியிருக்கிறார்.    இந்தநிலையில் காவல் நிலையத்தில் கழிவறையில் வைக்கப்பட்டிருந்த கிருமிநாசினியைக் குடித்து ,  கீரிஷ்மா தற்கொலைக்கு   முயன்றுள்ளார். இதனையடுத்து உடனடியாக அவரை காவல் துறையினர்  மீட்டு திருவனந்தபுரம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.  தற்போது அவர் நலமுடன் இருப்பதாக கூறப்படுகிறது.  இந்தச் சம்பவர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.