அருந்ததியர் உள் ஒதுக்கீட்டுக்கு எதிராக பேரணி நடத்த அனுமதி கோரி கிருஷ்ணசாமி ஐகோர்ட்டில் முறையீடு

 
krishnasamy

அருந்ததியர் உள் ஒதுக்கீட்டுக்கு எதிராக பேரணி நடத்த அனுமதிக்க கோரி புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று முறையீடு செய்தார். 

அமைச்சர் உதயநிதி மீது நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதியவேண்டும்:  'புதிய தமிழகம்' கிருஷ்ணசாமி | Krishnasamy Talks on Udhayanithi -  hindutamil.in

சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ஸ்ரீராம் மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி  அமர்வில் ஆஜரான கிருஷ்ணசாமி, அருந்ததியர் உள் ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளுநர் மாளிகையை நோக்கி நேற்று பேரணி நடத்த முடிவு செய்திருந்த நிலையில் கடைசி நேரத்தில் காவல் துறையினர் அனுமதி மறுத்து விட்டதாகவும் அதனால் அனுமதி அளிக்க வேண்டும் என முறையீடு செய்தார். மேலும் அவர் இந்த பேரணிக்காக திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பேர் திரண்டு நிலையில் கடைசி நேரத்தில் காவல் துறையினர் அனுமதி மறுத்ததாகவும் குறிப்பிட்டார். 

இதைக் கேட்ட நீதிபதிகள் இது தொடர்பாக வழக்கு தாக்கல் செய்தால் விசாரிக்கப்படும் எனவும் வழக்கை தாக்கல் செய்ய நீதிமன்றத்தின் அனுமதி தேவையில்லை என்றும் தெரிவித்தனர். இதற்கிடையில் முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் கிருஷ்ணகிரி கிரானைட் குவாரி டெண்டரை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தன. அப்போது நேரில் ஆஜராகி இருந்த முன்னாள் எம்பி செல்வகுமார் வழக்கில் வாதங்களை துவங்க அவகாசம் கோரினார்.  அவரது கோரிக்கையை ஏற்று வழக்கின் விசாரணையை நவம்பர் 15ஆம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதிகள், அன்றைய தினம் வாதங்களை துவங்காவிட்டால் வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்து செய்வதுடன் டென்டலுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படும் எனவும்  தெரிவித்தனர்.