கிருஷ்ண ஜெயந்தி - சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்

 
metro

கிருஷ்ண ஜெயந்தியையொட்டி நாளை (ஆகஸ்ட் 26) சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நிலா வெளிச்சத்தில் கிருஷ்ண ஜெயந்தி… எப்படி வழிபட வேண்டும்?

குழந்தைப் பருவ இறைவனாக மனமுருகி வழிபடப்படுவதில் முதலிடம் கிருஷ்ணனுக்குத் தான். இந்த கிருஷ்ணனின் அவதார தினம் ஆவணி மாத தேய்பிறை அஷ்டமியோடு கூடிய ரோகிணியில் நிகழ்ந்தது. இதனால் ஆண்டுதோறும் கிருஷ்ண ஜெயந்தி ஆவணி மாத தேய்பிறை அஷ்டமியோடு கூடிய ரோகிணியில் கொண்டாடப்படுகிறது. அதன்படி, நாளை கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடபடுவதையொட்டி, நாளை சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

metro


மேலும் காலை 8- 11 மணி வரை, மாலை 5-8 மணி வரை 6 நிமிட இடைவேளையிலும், காலை 5- 8 மணி வரை, நண்பகல் 11- 5 மணி வரை, இரவு 8-10 மணி வரை 7 நிமிட இடைவேளையிலும் இரவு 10-11 மணி வரை 15 நிமிட இடைவேளையிலும் மெட்ரோ ரயில் இயங்கும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.