தமிழ்நாட்டில் துணை முதல்வர் பதவிக்குதான் இன்றைக்கு போட்டி- கொங்கு ஈஸ்வரன்

 
தமிழ்நாட்டில் துணை முதல்வர் பதவிக்குதான் இன்றைக்கு போட்டி- கொங்கு ஈஸ்வரன்

தமிழ்நாட்டில் துணை முதல்வர் பதவிக்குதான் இன்றைக்கு போட்டி நடக்கிறது என திமுக பவள விழாவில் கொங்கு ஈஸ்வரன் உரையாற்றினார்.

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற திமுக பவளவிழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், “முதலமைச்சர் பதவிக்கு போட்டி இல்லை.. இன்றைய சூழலில் துணை முதலமைச்சர் பதவிக்கு தான் போட்டி.. முதலமைச்சர் என்றால் திமுக தான்.. அதுபோல துணை முதலமைச்சர் என்றாலும் திமுகவைச் சேர்ந்தவர் தான் வர வேண்டும்.. இதற்காக டிஎன்பிஎஸ்சி தேர்வு வைத்து தேர்ந்தெடுக்க முடியாது. பெரும்பான்மையாக இருக்கும் திமுக தான் முதலமைச்சர் பொறுப்பை வகிக்க வேண்டும். திமுக தொண்டர்கள் யாரை ஏற்றுக் கொள்கிறார்களோ அவர்தான் துணை முதலமைச்சர்.

ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஒரே மாதிரி தான் திமுக செயல்படும். இட ஒதுக்கீடு என்பது திமுக கொண்டு வந்தது என்பதை மறக்கக் கூடாது. திமுகவின் பொற்காலம் மு.க.ஸ்டாலின்” என்றார்.