அரசியல் கணக்கிற்காக பாஜக எதுவும் செய்யாது- மத்திய அமைச்சர்

 
ச்

மதுரை மாவட்டம் அ. வல்லாளபட்டியில் டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து தொடர்பாக நடந்த பாராட்டு விழாவில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி கலந்துகொண்டார்.

மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டி, வல்லாளபட்டி, நாயக்கன்பட்டி கிராம மக்கள் மற்றும் விவசாய சங்கங்களின் கோரிக்கையை ஏற்று டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைப்பதை கைவிடுவதாக மத்திய அரசு அறிவித்தது, இதனையடுத்து மதுரை அ.வல்லாளபட்டி மந்தை திடலில் பாராட்டு விழாவில் டங்ஸ்டன் கனிம சுரங்க திட்டத்தை ரத்து செய்த மத்திய சுரங்க துறை அமைச்சர் கிஷன் ரெட்டி மற்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு  வரவேற்பு அளித்தனர்.

   
நிகழ்ச்சியில் பேசிய மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி,"பிரதமர் மோடி தமிழ் மீது பற்று கொண்டவர், தமிழர்களின் செங்கோலை நாடாளுமன்றத்தில் வைத்துள்ளார், ஜல்லிகட்டு போட்டியை திரும்ப கொண்டு வந்தவர் பிரதமர் மோடி, பல ஆண்டுகளாக தமிழ் கலாச்சாரத்தை பாதுகாத்து வருகிறார், மதுரையும், காசியும் மிக பிரசித்திபெற்ற கோவில்களை கொண்டுள்ளது, பிரதமர் மோடி காசியில் தமிழ் சங்கம் நடத்தி உலகெங்கும் தமிழை  கொண்டு சேர்த்தார், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ் மீனவர்களை பிரதமர் மோடி மீட்டு கொண்டு வந்தார், அரசியலுக்காக பிரதமர் மோடி எதையும் செய்யவில்லை, தமிழ் மக்களின் மீதான அன்பால் தமிழ் மக்களுக்கு உதவிகளை செய்கிறார், அம்பலக்காரர்கள் டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்ய கோரிக்கை வைத்தார்கள், பிரதமர் மோடியின் ஆலோசனைக்கு பின் டங்ஸ்டன் திட்டம் ரத்து செய்யப்பட்டது, மக்கள் என்னை ஊருக்கு அழைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. அரிட்டாபட்டி பல்லுயிர் தளம் என்பதாலும், விவசாய பகுதி என்பதாலும் இத்திட்டத்தை ரத்து செய்து  பிரதமர் மோடி உத்தரவிட்டார். அரசியல் கணக்கிற்காக பாஜக எதுவும் செய்யாது” என்றார்.