ம.செ. கிழக்கில் குஷ்பு - வ. செ.மேற்கில் காயத்ரி ரகுராம்

 
k

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் செங்கல்பட்டு, உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கன மழை வெள்ளத்தால்  மக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர். ஆகவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் அரசு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பாஜக சார்பில் வரும் 19ஆம் தேதி அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.

 வரும் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணி பத்து முப்பது மணி அளவில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது என்றும்,  11 மாவட்டங்களில் பாஜகவின் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது என்றும் பாஜக நிர்வாகிகள் பங்கேற்று அதில் சிறப்புரையாற்ற இருக்கிறார்கள்,  மாவட்ட தலைவர்கள் தலைமையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகளும் பொதுமக்களும் கலந்து கொள்கிறார்கள் என்றும் பாஜக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

kk

 காஞ்சிபுரத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் டால்பின் ஸ்ரீதர்,  லோகநாதன் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.   செங்கல்பட்டில்  நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கரு.நாகராஜன்,  தங்க கணேசன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

 திருவள்ளூர் கிழக்கு பகுதியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ காயத்ரிதேவி,  தொழில் பிரிவு பாஸ்கர் பங்கேற்கிறார்.   திருவள்ளூர் மேற்கு பகுதியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் சக்கரவர்த்தி,  அரசு தொடர்பு பிரிவு பாஸ்கரன் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

 சென்னை கிழக்கு பகுதியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ ராதாரவி , மீனாட்சி நித்திய சுந்தர் ஆகியோர் பங்கேற்கிறார்கள் . தென் சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்பி வி.பி. துரைசாமி,   முன்னாள் மேயர் கராத்தே தியாகராஜன் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

 மத்திய சென்னை கிழக்கில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் நடிகை குஷ்பூ சுந்தர்,  வினோத் பி. செல்வம் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.   மத்திய சென்னை மேற்கு பகுதியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பால்கனகராஜ்,  குமரிகிருஷ்ணன் ஆகியோரும்,    வட சென்னை கிழக்கு பகுதியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் நடிகர் செந்தில் முன்னாள் எம்எல்ஏக்கள் கு.க.செல்வம் ஆகியோரும்,    வடசென்னை மேற்கு பகுதியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் சுமதி வெங்கடேஷ்,  காயத்ரி ரகுராம் ஆகியோரும்,   சென்னை மேற்கு பகுதியில் எம். என். ராஜா,  ஆசிம் பாஷா ஆகியோரும் பங்கேற்கிறார்கள் என்று பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.