கேரளாவில் ஓணம் நாளில் மட்டும் ரூ.124 கோடிக்கு மது விற்பனை
கேரள மாநிலத்தில் ஓணம் நாளில் மட்டும் 124 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்திலும் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்பு மிக்கத் திருவிழா ஓணம் பண்டிக்கை. மகாபலி சக்கரவர்த்தியின் செருக்கினை அடக்கிட, திருமால் வாமனராக அவதரித்து, பலிச்சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் தானமாகக் கேட்டதாகவும், அதற்கு மகாபலி சக்கரவர்த்தி இசைவளித்தவுடன், முதல் அடியில் பூமியையும், இரண்டாம் அடியில் வானத்தையும் அளந்த வாமனர், மூன்றாம் அடியை மகாபலி சக்கரவர்த்தியின் தலையில் வைத்து, அவரை அழிக்க முற்படும் சமயம், மகாபலி சக்கரவர்த்தி ஆண்டுதோறும் தன்னுடைய மக்களைக் காண தமக்கு அருள் செய்ய வேண்டும் என்று கோரியதை ஏற்று வாமனர் அருள் புரிந்தார் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் மக்களை காணவரும் மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் ஓணம் எனும் திருவோணத் திருநாளாகவும் கொண்டாடுகின்றனர்.
இந்நிலையில் அத்தகைய சிறப்பு மிக்க ஓணம் நாளில் கேரள மாநிலத்தில் மட்டும் 124 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 4 கோடி ரூபாய் அதிகமாகும். அதே நேரத்தில், உத்ராடம் வரையிலான 9 நாட்களில், கடந்த ஆண்டை ஒப்பிடும் போது, மது விற்பனை குறைந்துள்ளது. கடந்த ஆண்டு 9 நாட்களில் 715 கோடி ரூபாய்க்கு மது விற்பனை ஆன நிலையில், தற்போது, 14 கோடி ரூபாய் குறைந்து 701 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகியுள்ளது. கொல்லம் மாவட்டத்தில் உள்ள விற்பனை நிலையங்கள், முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளன. இந்த புள்ளிவிவரத்தை கேரள மாநில பானங்கள் கழகம் வெளியிட்டுள்ளது