கவரைப்பேட்டை ரயில் விபத்து - அக். 16, 17 தேதிகளில் விசாரணை

 
க்

கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக ஸ்டேஷன் மாஸ்டர் உள்பட 3 பேரிடம் விசாரணை நடைபெற்றது.

Image


திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை ரயில் நிலையம் அருகே மைசூரில் இருந்து சென்ற பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் அங்கு நின்றிருந்த சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் 19 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணையை நடத்தி வருகிறது ரயில்வே துறை மற்றும் ரயில்வே காவல்துறை. இதில் தற்போது என்ஐஏவும் விசாரணை களத்தில் இறங்கி உள்ளது. என்ஐஏவின் சென்னை பிரிவு எஸ்பி ஸ்ரீஜித் கவரப்பேட்டையில் ரயில் விபத்து ஏற்பட்ட பகுதியில் தற்பொழுது ஆய்வு மேற்கொண்டார். ஏற்கனவே காலையில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட நிலையில் தற்போது மெயின் லைனில் இருந்து லூப் லைன்க்கு ரயில் பாதை பிரியும் இடத்தில் சோதனை மேற்கொண்டார். 


விபத்து குறித்து 13 ரயில்வே ஊழியர்களுக்கு சென்னை கோட்ட ரயில்வே மேலாளர் தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சம்மன் அனுப்பிய நிலையில் தற்போது கவரப்பேட்டை ரயில் நிலையத்தில் விபத்துக்குள்ளான ரயிலின் லோகோ பைலட், உதவி லோகோ பைலட், கவரப்பேட்டை ஸ்டேஷன் மாஸ்டர் ஆகிய மூன்று பேரிடம் விசாரணை குழுவினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக அக்டோபர் 16மற்றும் 17 ஆம் தேதிகளில் ரயில்வே பாதுகாப்ப் ஆணையர் ஏ.எம். சவுத்ரி விசாரணை மேற்கொள்கிறார். பாகமதி ரயில் ஓட்டுநர், தொழில்நுட்ப பணியாளர்கள், கவரைப்பேட்டை ரயில் நிலைய மேலாளர் ஆகியோரிடம் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.