கரூர் மாணவி தற்கொலையில் திடீர் திருப்பம்- மாணவியின் ஆசிரியரும் தற்கொலை

 
Letter

கரூர் பரணிபார்க் மெட்ரிக் பள்ளி கணித ஆசிரியர் சரவணன் என்பவர் துறையூரில் உள்ள அவரது மாமனார் வீட்டில்  தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூரில், கடந்த 19 ஆம் தேதி பரணி பார்க் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி பாலியல் துன்புறுத்தல் காரணமாக அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்துகொள்ளும் முன்பு "பாலியல் துன்புறுத்தலுக்கு சாகற கடைசி பொண்ணு நானாக இருக்கணும்” என ஒரு உருக்கமான கடிதம் எழுதிவைத்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், அதே பள்ளியின் கணித ஆசிரியர் துறையூரில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கரூர் காமராஜபுரம் வடக்கு பகுதியில் மனைவியுடன் வசித்து வந்தார் சரவணன் (42). இவர் கரூர் பரணிபார்க் வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளியில் கணக்கு ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், பள்ளியில் ஏற்பட்ட சில பிரச்சினைகள் காரணமாக இன்று பள்ளியிலிருந்து தன் தந்தைக்கு உடல்நிலை சரியில்லை என அனுமதிகேட்டு துறையூர் செங்காட்டுப்பட்டியில் உள்ள தனது மாமனார் நடராஜன் வீட்டுக்கு சென்ற அவர், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து துறையூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.