தீப ஒளியில் ஜொலித்த ஈஷா!

 
deepam

கார்த்திகை மாத பவுர்ணமி நாளும், கார்த்திகை நட்சத்திரமும் இணைந்த நாளில்,  இல்லங்களிலும், கோவில்களிலும், தீபங்களை ஏற்றி  கொண்டாடும் விழா தீபத் திருநாள் ஆகும்.கார்த்திகை விழாவை குமராலாய தீபம், சர்வாலய தீபம், விஷ்ணுவாலய தீபம் என மூன்றாக கோவில்களிலும் வீடுகளிலும் கொண்டாடுவர்.

அதன்படி, இன்று திருவண்ணாமலை உள்ளிட்ட அனைத்து முக்கிய சிவன், முருகன் உள்ளிட்ட ஸ்தலங்களிலும் கார்த்திகை திருவிழாவையொட்டி, தீபங்கள் ஏற்றப்பட்டன.

சில இடங்களில் பனை ஓலைகளால் உருவாக்கப்பட்டிருந்த சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. 

இந்நிலையில் கார்த்திகை தீபத் திருநாளான இன்று (நவ.19) ஈஷாவில் உள்ள தியானலிங்கம், சூர்ய குண்ட மண்டபம் மற்றும் லிங்க பைரவி உள்ளிட்ட இடங்களில் ஆயிரக்கணக்கில் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டன. அந்த இடங்கள் அனைத்தும் தீப ஒளியில் ஜொலித்தன.