கந்துவட்டி கொடுமை : மனைவி மற்றும் 3 குழந்தைகளை கொன்று தந்தை தூக்கிட்டு தற்கொலை!

கந்துவட்டி கொடுமை : மனைவி மற்றும் 3 குழந்தைகளை கொன்று தந்தை தூக்கிட்டு தற்கொலை!

கந்துவட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே உள்ள புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் மோகன் -விமலேஸ்வரி தம்பதி. இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர், மோகன் சொந்தமாக மர பட்டறை நடத்தி வந்துள்ளார்.

கந்துவட்டி கொடுமை : மனைவி மற்றும் 3 குழந்தைகளை கொன்று தந்தை தூக்கிட்டு தற்கொலை!

இந்த தொழிலில் நல்ல லாபம் பார்த்து வந்த மோகன், கொரோனா காரணமாக தொழில் நலிவடைந்து உள்ளார். அத்துடன் பல இடங்களில் கடன் வாங்கியதாக தெரிகிறது. இந்த சூழலில் மர பட்டறையை திறக்க மோகன் வராததால் அவரது மாமனார் அவரது வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். அப்போது நீண்ட நேரம் கதவை தட்டியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைநது அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது மோகன் தூக்கில் பிணமாக தொங்கியதுடன் அவரது மனைவி மற்றும் குழந்தைகளும் வேறு ஒரு அறையில் தூக்கில் பிணமாக தொங்கி உள்ளனர்.

கந்துவட்டி கொடுமை : மனைவி மற்றும் 3 குழந்தைகளை கொன்று தந்தை தூக்கிட்டு தற்கொலை!

இதையடுத்து உடனடியாக வளவனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சடலங்களை அனுப்பி விசாரணையை தொடங்கியுள்ளனர்.

கந்துவட்டி கொடுமை : மனைவி மற்றும் 3 குழந்தைகளை கொன்று தந்தை தூக்கிட்டு தற்கொலை!

அதில் மோகன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீராம் சிட்ஸ் நிறுவனத்தில் 5 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். கொரோனா காரணமாக தவணையை சரியாக செலுத்த முடியாததால், நிதி நிறுவன ஊழியர்கள் வட்டிக்கு வட்டி என கூறி அதிக தொகையை கேட்டு மிரட்டியுள்ளனர். இதனால் மோகன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்ததுடன், அவர்களை மின்விசிறியில் மாட்டி தொங்க விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கந்துவட்டி கொடுமை : மனைவி மற்றும் 3 குழந்தைகளை கொன்று தந்தை தூக்கிட்டு தற்கொலை!

போலீசார் மோகனின் வீட்டில் நடத்திய சோதனையில் அவர் கந்துவட்டி, ஸ்ரீராம் நிறுவனம் மற்றும் வங்கியில் என ரூ. 45 லட்சம் அளவிற்கு கடன் வாங்கியது தெரியவந்துள்ளது. கடன் நெருக்கடி, கந்துவட்டி தொல்லையால் குழந்தைகள் மற்றும் மனைவியை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.