“வீட்டின் பூட்டை உடைத்துவிட்டனர்”- போலீசில் கஞ்சா கருப்பு பரபரப்பு புகார்

 
கஞ்சா கருப்பு

தான் குடியிருக்கும் வாடகை வீட்டின் பூட்டை உரிமையாளர் உடைத்து விட்டதாக நடிகர் கஞ்சா கருப்பு மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

pt desk

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த நடிகர் கஞ்சா கருப்பு சென்னை மதுரவாயல் கிருஷ்ணா நகர் பகுதியில் ரூபாய் 20 ஆயிரத்துக்கு வாடகைக்கு வீடு எடுத்து தங்கி உள்ளார். சென்னையில் சினிமா சூட்டிங் நடக்கும் போதெல்லாம் வந்து வாடகை வீட்டில் தங்குவார். இந்நிலையில் தான் வெளியூரில் இருந்த சமயம் பார்த்து, தனது வீட்டின் பூட்டை உரிமையாளர் ரமேஷ் உடைத்து வேறு ஒருவருக்கு வாடகைக்கு விட முயற்சித்துள்ளதாக நடிகர் கஞ்சா கருப்பு மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

ஐந்து ஆண்டுகளாக தான் குடியிருந்து வருவதாகவும், தன்னை கேட்காமல் வீட்டின் பூட்டை உரிமையாளர் உடைத்திருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக மதுரவாயல் காவல்துறையினர் இரு தரப்பினரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.