கனியாமூர் கலவரம்- ஸ்ரீமதியின் தாய்மாமன் அதிரடி கைது

 
 க்

கனியாமூர் கலவரத்தில் ஈடுபட்ட பள்ளி மாணவி ஸ்ரீமதியின் தாய் மாமன் செந்தில் முருகன் என்பவர் மீது 15 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார், அவரை கைது செய்தனர்.

ஸ்ரீமதி

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 13 ஆம் தேதி பள்ளி மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து ஜூலை 17ஆம் தேதி மாணவர் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் சார்பில் நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறிய நிலையில் இந்த கலவரத்தில் தனியார் பள்ளி கட்டிடங்கள் மற்றும் பேருந்துகள் மற்றும் தனியார் பள்ளிக்கு சொந்தமான பொருட்கள் என அனைத்தும் அடித்து நொறுக்கி சேதப்படுத்தப்பட்டது மட்டுமின்றி காவல்துறை வாகனங்கள் உள்ளிட்ட அரசு பொது சொத்துக்களும் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் கனியாமூர் பள்ளி கலவர வழக்கில் இதுவரை 900-த்திற்கும் மேற்பட்டோரை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். 

Image

அதுமட்டுமின்றி கலவரத்தில் ஈடுபட்டதாக கூறி பள்ளி மாணவி ஸ்ரீமதியின் தாய் செல்வி மற்றும் பள்ளி மாணவி ஸ்ரீ ஸ்ரீமதியின் தாய்மாமன் செந்தில் முருகன் உள்ளிட்ட பலருக்கும் சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் இதில் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் தாய் மாமன் செந்தில் முருகனுக்கு சிறப்பு புலனாய்வுத்துறை சார்பில் மூன்று முறை சம்மன் அனுப்பப்பட்ட நிலையிலும் அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்த நிலையில் தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகாமல் சென்னையில் இருந்து வந்த பள்ளி மாணவி ஸ்ரீமதியின் தாய் மாமன் செந்தில் முருகன் என்பவரை இன்று சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் சென்னை போரூரில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து கைது செய்து கள்ளக்குறிச்சி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து தொடர்ந்து கனியாமூர் பள்ளி கலவரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட பள்ளி மாணவி ஸ்ரீமதியின் தாய்மாமன் செந்தில் முருகன் மீது பொது சொத்திற்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட 15 பிரிவுகளின் கீழ் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து செந்தில் முருகனிடம் இரண்டு மணி நேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில் தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தப்பட்ட நிலையில் வரும் அக்டோபர் 9ஆம் தேதி வரை செந்தில் முருகனை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். மேலும் கனியாமூர் பள்ளி கலவர வழக்கு சூடு பிடித்துள்ள நிலையில் கலவரம் நடைபெற்ற போது சம்பவ இடத்தில் இருந்து கலவரத்தை தூண்டியதாக பள்ளி மாணவி ஸ்ரீமதியின் தாய் செல்வியை விரைவில் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் தங்களது விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.